சனாதனம் பற்றிய சர்ச்சைகள் சில நாட்களாக பூதாகரமாகி வரும் நிலையில் தற்போது அது குறித்து ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவொன்றை போட்டுள்ளார். அதில் அவர் ஜவான் படத்தையும் இழுத்து போட்டுள்ள பதிவு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் திரையுலகில் பிரபல திரை விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன். பல படங்களுக்கு நியாமாகவும் அதே சமயம் நடிகர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியும், படங்களை ஓவராக கலாய்த்தும் விடுவார். இதனால் இவரை விமர்சிக்கும் ரசிகர் கூட்டமும் அதிகம். இந்த நிலையில் அவர் ஜவான் படத்தையும் சனாதனத்தையும் இணைத்து ட்விட்டரில் புதிய பதிவொன்றை போட்டு இருக்கிறார். அதி தற்போது சர்சையை கிளப்பி இருக்கிறது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஜவான்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மூலமாக அனிருந், அட்லி, நயன்தாரா போன்றவர்கள் முதன் முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழிக்கும் வரை ஓயப் போவதில்லை என்று பேசினார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பலரும் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடுத்து வருகின்றனர். சுமார் 250 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் சனாதனத்தையும் ஜவான் படத்தையும் கலாய்த்து ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார். அதில், “சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?’ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
'சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?'
'ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?' pic.twitter.com/kAlCtTyqAP
— Blue Sattai Maran (@tamiltalkies) September 4, 2023
Twitter original source from: Blue Sattai Maran