கணவருடன் பொங்கல் திருநாளை கொண்டாடிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரித்திகா.!

வெளியிட்டது

இன்று உலகம் எங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். புது பானையில் பொங்கலிட்டு, புத்தாடை உடுத்தி, கரும்பு, வெல்லம், பச்சரிசி, புது காய்கறிகள் என இறைவனுக்கு படையலிட்டு சூரியனை வழிபட்டு வருகின்றனர்.

கணவருடன் பொங்கல் திருநாளை கொண்டாடிய 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை ரித்திகா.! 1

மக்கள் மட்டுமில்லாமல், நடிகர்கள் பலரும் தற்போது பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பிரபலம் ரித்திகாவும் தனது கணவர் மற்றும் தம்பியுடன் இணைந்து பொங்கல் திருநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பலரும் அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்கிற சீரியலில் ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா தமிழ் செல்வி.  இவருக்கு அதன் பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரம்மாண்டமான சீரியலாக இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வந்தார். ஆனால் கதை செல்லும் போக்கு பிடிக்காத காரணத்தினால் ரித்திகா சீரியலை விட்டு விலகினார்.

தற்போது அவர் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்த்து வந்த வினு என்பவர் உடன் காதல் மலர்ந்தது.

இருவரும் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரித்திகா. அந்த வகையில் புத்தாண்டு, ஓணம், கிறிஸ்துமஸ் என அனைத்து விழாவையும் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் பொங்கல் வைத்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

“இந்த தைத்திருநாள் முதல் விடியும் பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று அவர் அந்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். பலரும் ரித்திகா மற்றும் குடும்பத்தினருக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்