வாட்டர் கலர் கொண்டு ‘வேட்டையன்’ போஸ்டரை தயாரித்துள்ள படக்குழு.! வெளியான மேக்கிங் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. கைகளால் வரையப்பட்ட அந்த போஸ்டர் எப்படி உருவானது? என்று சொல்லி தற்போது வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டி.ஜே ஞானவேல் இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்டர் கலர் கொண்டு 'வேட்டையன்' போஸ்டரை தயாரித்துள்ள படக்குழு.! வெளியான மேக்கிங் வீடியோ..! 1
இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். அனைவருமே மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. படத்தின் பெயர் ‘வேட்டையன்’ என வைத்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கி இருந்தது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நாகர்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து அடிக்கடி ரஜினிகாந்த் நாகர்கோவில் சென்று வந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வேலை இல்லை என்று சொல்லி பிரசன்னாவை பிரிகிறாரா சினேகா? ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

வாட்டர் கலர் கொண்டு 'வேட்டையன்' போஸ்டரை தயாரித்துள்ள படக்குழு.! வெளியான மேக்கிங் வீடியோ..! 3

படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு படத்தில் இருந்து போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். கைகளால் வரையப்பட்ட வாட்டர் கலர் பெயிண்டிங் போல இருந்த அந்த போஸ்டர், எப்படி வரையப்பட்டது? என்பது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Lyca Productions

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment