Categories: சினிமா

இப்படி ஒரு படத்தை எடுக்கத்தான் ஹாலிவுட் வர போய் ரைட்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா? திட்டி தீர்த்த ப்ளூசட்டை.!

வெளியிட்டது

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான தமிழரசன் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் தற்போது அவரது விமர்சனங்களை கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, 2002 ஆம் ஆண்டு வெளியான ஜான் கியூ என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அவரது பையன் பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுகிறார். அந்த சிறுவனை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்ர பொழுது உங்கள் பையனுக்கு இதயத்தில் கோளாறு இருக்கிறது, இதை டிரான்ஸ்பிளான்ட் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு 70 லட்சம் செலவாகும் முதல் தவணையாக 20 லட்சத்தை கட்டுங்கள் அப்போதுதான் அவரது பெயர் இந்த பட்டியலில் இணையும், அதில் சீனியாரிட்டி முறையில் இதயமாற்று அறுவை சிகிச்சை நடக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் விஜய் ஆண்டனியால் 20 லட்சத்தை கட்ட முடியவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு படத்தை எடுக்கத்தான் ஹாலிவுட் வர போய் ரைட்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா? திட்டி தீர்த்த ப்ளூசட்டை.! 1
மருத்துவர்களிடம் எவ்வளவோ கெஞ்சி பார்க்கிறார் விஜய் ஆண்டனி .ஆனால் மருத்துவர்கள் தங்களால் மருத்துவ உதவிகள் மட்டுமே செய்ய முடியும், நிதி உதவி செய்ய முடியாது என்று மறுக்கின்றனர். பின்னர் அந்த மருத்துவரை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்ட ஆரம்பிக்கிறார் விஜய. ஆண்டனி. மருத்துவமனையை ஹைஜாக் செய்கிறார். பின்பு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படத்தின் நோக்கம் என்னவோ அது கிளைமாக்ஸ் இல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மையக்கருவாக இருக்க வேண்டும். ஆனால் இதில் பையனுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்பிளடேஷன் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை. பையனுக்கு என்ன ஆனால் என்ன என்பது போல யாரை வேண்டுமானாலும் சுட்டு தள்ளிக் கொண்டு இருக்கிறார் ஹீரோ. இதை பார்த்தால் சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. இது போன்ற படத்தை எடுப்பதற்காக தான் ஹாலிவுட் வரை சென்று இதை ரீமேக் செய்ய காப்பிரைட் வாங்கினீர்களா.? என்று ப்ளூ சட்டை கேள்வி எழுப்பினார்.


ஒரு வீடு, ஒரு மொட்டை மாடி, ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு ஹாஸ்பிட்டல் என்று சுற்றி அதையே காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் இருப்பவர்கள் ஏதோ பிக்பாஸ் வீட்டுக்கு வந்தது போல சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்க்கும் நமக்கும் ஒரு சுவாரஸ்யம் ஏற்படவில்லை. ஒரு கேரக்டர் கூட வலிமையாக வடிவமைக்கப்படவில்லை. ஜான் க்யூ படமே ஏதோ ஓகே தான் என்பது போல இருக்கும். ஆனால் அந்த ஹீரோ அந்த முழு படத்தையும் தாங்கி இருப்பார். யோகி பாபு வழக்கம்போல வந்து நான் காமெடி செய்கிறேன் முடிஞ்சா சிரிச்சுக்கோ என்பது போல காமெடி செய்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை பார்த்தால் சிரிக்கிறதா என்ற குழப்பத்திலேயே படத்தை பார்த்துவிட்டு வந்தோம் என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கூறியிருக்கிறார். நீங்களும் அந்த முழு வீடியோவை பார்க்க..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்