இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என்று தற்போது காமெடி நடிகர் ஒருவர் விமர்சனம் செய்திருக்கும் காணொளி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதன் பின்னர் இவர் கர்ணன், மாமன்னன் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே சாதிய கட்டமைப்புகளுக்கு எதிரான கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கும் படங்களாகவே இருந்து வந்துள்ளது. மாமன்னன் திரைப்படம் வெளியாகி ஓடிடி தளத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் மில்லியன் பார்வையாளர்களை ஒரு வாரத்தில் பெற்று சாதனை படைத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது மாமன்னன் திரைப்படம். தற்போது இதன் இயக்குனராக இருக்கும் மாரி செல்வராஜ் பற்றி காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் தற்போது பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்கிற வடிவேலு காமெடியில் நடித்து பிரபலமானவர் டெலிபோன் ராஜ். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார். இவர் தற்போது மாரி செல்வராஜ் பற்றி சில அதிர்ச்சியான தகவல்களை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, “ஜாதியைப் பற்றி பேசாமல் இருந்தாலே காலப்போக்கில் அழிந்துவிடும், ஆனால் ஜாதிப் படம் எடுக்கிறேன் சொல்லி பலரையும் தூண்டி விடுகிறார்கள். ஜாதி என்றால் என்ன என்று சொல்லி தற்போது சின்ன குழந்தைகள் கூட வந்து கேட்கிறார்கள். நாங்கள் நசுக்கப்படுகிறோம் என ஜாதி பிரச்சார படங்களை எடுக்கும் மாரி செல்வராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களை அடிக்கிறார் உதைக்கிறார்.
View this post on Instagram
அவர் நடிகர்களை அடிப்பதை வெளியில் சொன்னால் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காது என்று பயந்து யாரும் வெளியில் சொல்வது கிடையாது. மாரி செல்வராஜ் அடித்ததால் தன்னால் ஒரு வருடம் நடிக்கவே முடியவில்லை என்று சொல்லி நடிகை ஒருவர் தன்னிடம் வாட்சப்பில் கூறினார். அவர் கூறிய ஆடியோ தற்போதும் என்னிடம் இருக்கிறது. மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ என்று உதயநிதியே கூறியிருக்கிறார். அவர் மற்ற நடிகர்களை அடிப்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று டெலிபோன் ராஜ் பேட்டியில் கூறியிருக்கிறார். பலரும் மாரி செல்வராஜ் மீது வன்மத்தை கொட்டி வரும் நிலையில் தற்போது டெலிபோன் ராஜும் அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..!
View this post on Instagram