தற்போது மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. இதனால் தொலைக்காட்சிகள் அனைத்திலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்து வருகிறது. சில நிகழ்ச்சிகளில் சமூக அக்கறை , சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறினாலும், பல நிகழ்ச்சிகளில் ஆபாசமாக தான் நடந்து வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கில் தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி அனைவரையும் முகம் சுளிக்க வைத்து உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்,ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே போட்டி வைக்கப்படுகிறது. இந்த போட்டியில் பெண்கள் அணியை வெற்றிபெற வைக்க வேண்டி, போட்டியில் கலந்துகொண்ட ஆணிடம், பெண் ஒருவர், அவரை கட்டிப்பிடிக்க முயல்வது, முத்தம் கொடுக்க முயல்வது போன்ற சீண்டல் செய்து உள்ளார். ஆண் தள்ளி சென்றாலும் பெண் விடாமல் அவருக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார் .
இதனை அங்கிருந்த அனைவரும் கைதட்டி ரசித்து இருப்பது அதிர்ச்சியான ஒன்றாக அமைந்து இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையே ஒரு ஆண் பெண்ணிடம் செய்தால் சும்மா விடுவார்களா, ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயமா என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Embed Video Credits : STAR MAA