Categories: சமூகம்

எப்போது வேண்டுமானாலும் எல்லையில் பதற்றம் ஏற்படலாம்!எ‌ச்ச‌ரி‌க்கை விடு‌த்த ராணுவ தளபதி!!

வெளியிட்டது
எப்போது வேண்டுமானாலும் எல்லையில் பதற்றம் ஏற்படலாம்!எ‌ச்ச‌ரி‌க்கை விடு‌த்த ராணுவ தளபதி!! 1

இந்திய எல்லைக் கோடு பகுதியில் பதற்றம் எந்த நேரத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டின் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. கடந்த மாதம் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் 950 முறை அத்துமீறி தாக்குல் நடத்தப்பட்டு இருக்கிறது ’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கூறுகையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பதற்றம் எந்நேரமும் அதிகரிக்கலாம். நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும், என்றார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்