எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்த இடத்தை அடைந்தவர் என்றால் அது அஜீத் அவர்கள்தான். இன்று தமிழ்நாட்டு மக்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவரது ரசிகர்கள் இவரை செல்லமாக ‘தல’ என்று அழைப்பதுண்டு. ஆரம்ப காலத்தில் இவர் நடித்த அமராவதி, வாலி, ஆசை, அமர்க்களம், போன்ற படங்களில் சாக்லேட் பாயாக தோன்றி பலரின் உள்ளங்களை கவர்ந்தார். பின்னாளில் பில்லா, என னை அறிந்தால், மங்காத்தா, வீரம், வேதாளம், விசுவாசம் போன்ற படங்களில் மாறுபட்ட நடிப்பில் ரவுடி லுக்கில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மூன்று வருடங்களாக அஜீத்தின் எந்த படமும் வெளியாகிவில்லை. பின்னர் மிகுந்த எதிர்பார்ப்போடு எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படம் வெளியானது. ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது AK 61, AK62 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். AK61 படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அஜீத். இதற்கான படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜீத்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.
வலிமை படத்தில் நடித்த போது அஜீத் மிகவும் உருவக்கேலி செய்யப்பட்டார். குறிப்பாக தரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜீத்தை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருந்தார். அதில் முகத்தில் தொப்பை விழுந்துவிட்டதாகவும், ஆட சொன்னால் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போன்று ஆடிக் கொண்டுள்ளார் என்றும் தொப்பை பெருதாகி விட்டது போன்ற தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுத்தார். இந்த நிலையில் தற்போது அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தொப்பையை குறைத்து செம்ம ஃபிட்டாக மாறியிருக்கிறார் அஜீத். இந்த புகைப்படத்தை பகிர்ந்து எவன்டா தலையை ஃபிட் இல்லன்னு சொன்னது என்று ப்ளூ சட்டை மாறனை கழுவி ஊற்றி வருகின்றனர்.