தற்போது புதிய கெட்டபில் லண்டனுக்கு நடிகர் அஜித்குமார் சென்றிருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கு டிக்கெட் எடுப்பதற்கு அவர் லைனில் காத்திருந்தபோது முன்னாள் நின்றிருந்த பெண் ஒருவர் அவரைப் பார்த்த சந்தோஷத்தில் வீடியோ எடுத்திருக்கிறார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் 1993ம் ஆண்டு “அமராவதி” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அன்று தொடங்கி தற்போது துணிவு படம் வரை சுமார் 60 படங்களில் அவர் நடித்து முடித்திருக்கிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, கிரீடம், பில்லா, மங்காத்தா, வேதாளம் போன்ற பல படங்கள் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த முக்கியமான படங்களாகும். ஹைதராபாத்தில் ஒரு தமிழ் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் மகனாகப் பிறந்த இவர 1990 ஆம் ஆண்டு “என் வீடு என் கணவர்” என்கிற படத்தில் சிறு மாணவர் வேடத்தில் நடித்தார். அதுவே அவர் நடித்த முதல் படமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தமிழில் 1993 ஆம் ஆண்டு அமராவதி என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்திருக்கிறார் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. கடைசியாக நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று படங்களாக எச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார் அஜித் குமார். துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி பொங்கலுக்கு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் தளபதி விஜயின் வாரிசு படத்துடன் நேரடியாக மோதியிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த இந்த படத்தின் டிரைலர் மட்டும் சுமார் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்தது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் புதிய ஸ்டைலில் தல தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் சூட்டிங் அனைத்தும் முடிவடைந்து புது லுக்கில் தல தற்போது லண்டனுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அங்கு அவர் வரிசையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது முன்னாள் நின்றிருந்த ஒரு பெண் அஜீத்தைப. பார்த்ததும் சந்தோஷத்தில் “ஐயோ, தல நிற்கிறார் பாரு” அவரை முதன்முறையாக இப்பதான் நேரில் பார்க்கிறேன் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார். மேலும் தனது போனில் அவர் அதை வீடியோவாக எடுத்திருக்கிறார். அதை கவனித்த தல க்யூட்டாக பார்த்து ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O