வாரிசு பட லுக்கில் திருமணத்திருக்கு செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்த தளபதி.! Recent வீடியோ.!

இளையதளபதி விஜய் சென்னையில் திருமணம் ஒன்றிற்கு மாஸ் லுக்கில் என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வாரிசு படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதே லுக்கில் அவர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் திரு மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த போதிலும், இவருக்கு முதல் படமாக அமைந்தது 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்கிற படம் தான். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 66 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் தளபதி விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாரிசு பட லுக்கில் திருமணத்திருக்கு செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்த தளபதி.! Recent வீடியோ.! 1
விஜய் தற்போது தனது 66 படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இருந்து ரஞ்சிதமே என்கிற பாடலும், தீ என்கிற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். விஜய்யின் முதல் நேரடி தெலுங்கு படம் இதுதான். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது. திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு அஜித்தின் துணிவுடன் மோத இருக்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜயின் படங்கள் நேரடியாக மோத இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  யப்பா..நம்ம குஷ் அக்காவா இது? உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன குஷ்பூ

வாரிசு பட லுக்கில் திருமணத்திருக்கு செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்த தளபதி.! Recent வீடியோ.! 3
இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் வியாபார பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. தற்போது தளபதி விஜய் சென்னையில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி எம் பி முரளிதரன் மகனின் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. அதில் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு கலர் பேண்ட் அணிந்து வாரிசு படத்தில் வரும் அதே ஸ்டைலில் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அப்போது கூட்டத்தில் பெண் ஒருவர் ஓடி வந்து விஜய்க்கு வணக்கம் சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் விஜயின் பாதுகாவலர் அவரை மறைத்து கொண்டிருக்க, விஜய் தனது பாதுகாவலரை விலக்கிவிட்டு பெண் ரசிகைக்கு வணக்கம் கூறியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: NewsBeez

விளம்பரம்

Leave a Comment