1999ஆம் நடிகை சிம்ரனின் தோழியாக முதல் முறை சினிமாவில் தோன்றினார் நடிகை திரிஷா. சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி பின் நாயகியாக வளர்ந்து 40 வயதை நெருங்கியும் இன்றளவும் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார் திரிஷா. 23 ஆண்டு சினிமா வாழக்கையில் இவர் அடைந்திராத உச்சமும் இல்லை, கடந்திராத தோல்விகளும் இல்லை. தென்னிந்தியா சினிமாவின் ராணி என அழைக்கப்படும் திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்தியாவின் முக்கிய சினிமா திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

2002ஆம் சூரியா, நந்தா, லைலா நடிப்பில் அமீர் இயக்குனராக அறிமுகமான “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் திரையில் நாயகியாக மாறினார் திரிஷா. தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகை என்பதால் எளிதில் மற்ற மொழி நடிகைகளை பின்னுக்கு தள்ளி அழகு, நடிப்பு என திறமையுடன் விரைவில் முன்னணி நடிகையாக மாறினார். நடிகர் விஜய்யின் “கில்லி” படம் இவர் நட்சத்திர நாயகியாக்க, பின் தொடர்ந்து அவருடனே 5 படங்கள் நடித்தார். ஒரே காலகட்டத்தில் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் அழகான பார்க்கப்பட்டு இருவருடனும் மாறிமாறி படங்கள் நடித்தார். இதுவரை தமிழிலுள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ். சிம்பு. விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளார். அன்று துவங்கி இன்று இருக்கும் நாயகர்கள் வரை அனைவருடனும் இணைத்து நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ள இவர், இப்பொது “பிருந்தா” என்னும் வெப் சீரிஸ்ஸில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இதனை அடுத்து பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள, “பொன்னியின் செல்வன்” படத்திலும் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது திரிஷாவின் நடிப்பில் மலையாளத்தில் ராம், அவரே கதையின் நாயகியாக நடித்து வரும் “தி ரோடு” மற்றும் “பிருந்தா” வெப் சீரியஸ் ஆகியவை தயாராகி வருகிறது. தற்போது இவர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பிளாக ப்ளூ saree-யில் கட்டிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டு இளைஞர்களின் மனதை திருடியுள்ளார்.
