விஜய்சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் இந்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 19(1)(a). இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் முக்கிய கருவாக கருத்து சுதந்திரம் உள்ளது. இந்த படத்தை ஆன்டோ ஜோசப் பிலிப் கம்பெனி தயாரித்துள்ளது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி உள்ள வரவேற்பை பெற்று இருந்தது விஜய் சேதுபதி மலையாளத்தில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், இதற்கு முன்பு மலையாளத்தில் மார்க்கோனி மத்தாய் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார் விஜய் சேதுபதி. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் வெளியான போது அவர் ஒரு பத்திரிக்கையாளராக இருப்பது போன்ற காட்சிகளும் இருந்தது எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரியதாக இருந்தது. இந்த படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இருந்து புரட்சி எழுத்தாளராக கௌரிசங்கர் என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி, சில அரசியல் கட்சிகள் மனித கருத்து சுதந்திரத்தில் எவ்வாறு தலையிட்டு நாட்டை சீரழித்து வருகிறார்கள் என்று தனது புத்தகத்தில் எழுதுகிறார். இதனால் அவர் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகிறார் இதை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடந்த கொலைகளை பற்றி “கருப்பு” என்ற புத்தகத்தை அவர் எழுதி வருகிறார். இந்த புத்தகம் வெளியாக கூடாது என்று பல வலைகள் பின்னப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சாதாரண ஒரு குடும்பப் பெண்ணாக ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவராக நித்யா மேனன் நடித்துள்ளார். தனது கருப்பு புத்தகத்தை பிரிண்ட் செய்து வைக்கும்படி நித்யா மேனனிடம் விஜய் சேதுபதி கொடுத்துவிட்டு செல்கிறார்.

பிரிண்ட் செய்ய கொடுத்து விட்டு சென்ற விஜய் சேதுபதி திரும்பி வரவே இல்லை , பின்னர் சிறிது நாட்கள் கழித்து தான் செய்தியில் பார்த்த போது தான் அவருக்கு தெரிந்தது விஜய் சேதுபதி கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார் என்று. இதனால் விஜய் சேதுபதி ஏன் கொல்லப்பட்டார் என்ற காரணத்தை தேடி தேடி அலைகிறார் நித்யாமேனன். பின்னர் அவர் எழுதிய அந்த கருப்பு புத்தகத்தை முழுவதுமாக படித்து அவரின் ரசிகையாகவே மாறி போகிறார். கௌரிசங்கரின் கனவான இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று அவர் போராடுகிறார். இறுதியில் அவர் வெற்றி பெற்றாரா? அந்த புத்தகத்தை வெளியிட்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
எந்தவித ஒரு சலனமும் இல்லாமல் கதாபாத்திரங்கள் நடித்து அசத்தியிருப்பதும், கதை நேர்த்தியாக நகர்வதும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே விஜய் சேதுபதி மற்றும் நித்யாமேனன் வாழ்ந்து இருப்பதுத் படத்தின் நிறைகளாக பார்க்கப்படுகிறது. பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. குறைகள் என்று சொல்லும் அளவிற்கு எதுவும் பெரியதாக இல்லை. கதை நகரும் விதமும், விறுவிறுப்பும் குறைகள் இருந்தாலும் அதை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. ஆக மொத்தம் இந்த படம் ஒரு வெற்றி படமே.
