“என்னைக்குமே தல தலதான்”.பேட்டியின் நடுவில் கடுப்பேற்றிய செய்தியாளருக்கு அஜித் கொடுத்த பதிலடி வீடியோ.

வெளியிட்டது

ஒரு மனிதனின் குணம் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மாறாது என்பதற்கு இங்கு பல பேர் உள்ளனர். ரசிகர்களால் தல என கொண்டாடப்படும் நடிகர் அஜித் படங்களை தவிர போது வெளியில் பெரிதாக இருப்பதில்லை. ரசிகர் மன்றங்களை கலைத்தார், தன்னை யாரும் தல என குறிப்பிட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார். நடிகர்களிலேயே வேறொரு பாணியில், தனி பாணியில் இருப்பார் அவர்.  வீடியோ லிங்க் கீழே.

அவர் ஊடகங்களிடமும் பேசி பல வருடங்களை ஆகி விட்டன, இவ்வளவு ஏன் விருது விழாவிற்கு கூட அவர் செல்வதை தவிர்த்து விட்டார். இருப்பினும் ரசிகர்கள் அவரை போது வெளியில் ஒருமுறையாவது பார்த்து விடுவோமா? என இன்னமும் காத்துள்ளனர். பெரும்பாலும் மற்றவர்களை மிகவும் மதிக்க கூடிய, பண்பான, அமைதியான மனிதர் இவர் என பலரும் கூற நாம் கேட்டுள்ளோம். ஆனால் இப்போதுள்ள மக்களுக்கு படத்தை தவிர அஜித் நிஜ வாழ்க்கையில் எப்படி பட்டவர் என யாருக்கும் தெரியாமலேயே உள்ளது.

"என்னைக்குமே தல தலதான்".பேட்டியின் நடுவில் கடுப்பேற்றிய செய்தியாளருக்கு அஜித் கொடுத்த பதிலடி வீடியோ. 1

இந்தநிலையில் ஒரு பழைய வீடியோ ஒன்று அஜித் பேட்டி கொடுத்துள்ள வீடியோ தற்போது பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது. ஏனெனில், அந்த வீடியோவில் பெரும்பான்மையான ரசிகர்கள் கூறும் பண்பான மனிதர் அவர் என்பது நிரூபிக்கும் சாட்சி உள்ளது.

அந்த வீடியோவில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போது, தொடர்ந்து செய்தியாளர் ஒருவரின் போன் அடித்து கொண்டே இருக்க, பேட்டியை நிறுத்திவிட்டு அஜித் பொறுமையாக “சார், உங்க போன்’அ கொஞ்ச சைலெண்டுலா போடுங்க” என பொறுமையாக கூறியுள்ளார்.

எதார்ச்சியாக நாம் பேசும் போது மற்றொருவர் இடையூறு செய்தல் எல்லாருக்கும் கோவமா வருவது சகஜம், இந்த சூழ்நிலையில் கூட பொறுமையாக இருக்கும் அஜித் எவளோ பண்பானவர் என நமக்கு தெரிகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்