தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஏர்போர்ட்டில் கைக்குழந்தையுடன் தனியாக வந்த பெண் ஒருவருக்கு சூட்கேஸ்களை எடுத்துக் கொடுத்து உதவியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தல அஜித்தை பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் எளிமையாகவும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக அஜித்குமார் விளங்கிக் கொண்டிருக்கிறார். நாம் ஒரு பிரபலம், நாம் எங்கே வெளியே சென்றால் கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ? என்கிற நல்ல எண்ணத்தில் எப்பொழுதுமே அதிகமாக வெளியில் வராமல் இருக்கிறார். அப்படியே வந்தாலும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுபவராக தல விளங்கிக் கொண்டிருக்கிறார். இவர் படப்பிடிப்புக்காக அடிக்கடி விமான நிலையத்திற்கு சென்று வரும்போது கூட இதே போன்ற கட்டுப்பாடான செயல்களைத் தான் கடைபிடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அஜித்தின் தந்தை காலமாகி இருந்தார். அப்போது கூட அவர் பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காக இறுதிச் சடங்குகளில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரிக்கையாக விடுத்து இருந்தார். மேலும் காலையில் இறந்த தனது தந்தையின் இறுதி சடங்குகளை மத்தியத்திற்குள் முடித்து எந்த பரபரப்பும் இல்லாமல் எளிமையாக நடந்து கொண்டார் அஜித் குமார். இந்த நிலையில் மீண்டும் அது போன்று ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில் பெண் ஒருவர் விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சூட்கேஸை எடுக்க தடுமாறிக் கொண்டிருந்தபோது, தல அஜித் குமார் அவருக்கு உதவி செய்திருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு செல்லும் பொழுது எனது மனைவி பத்து மாத குழந்தையை வைத்துக்கொண்டு சூட்கேசை எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தல அஜித் குமார் பரவாயில்லமா நானும் இரண்டு குழந்தைகளுக்கு பிள்ளைதான் எனக்கும் உங்கள் வலி புரிகிறது என்று சொல்லி சூட்கேஸை எடுத்து வந்தார்.
மேலும் இந்த பெண்ணின் இருக்கைக்கு அருகே வரை சென்று சூட்கேஸை கொடுத்து உதவியிருக்கிறார். அப்போது அஜித் உடன் வந்தவர் நீங்க எதுக்கு தலைவா நான் கொண்டு வரேன் என்று சொல்ல அவர் பரவாயில்லையென்று பதில் அளித்திருக்கிறார். பின்னர் விமானத்தில் இருந்து இறங்கி பேருந்துக்கு செல்லும் போதும் கூட அந்த பெண் சூட்கேஸை கேட்ட போது அஜீத் தர மறுத்துவிட்டார். அவரின் இந்த செயல் தன்னை நெகிழ வைத்துவிட்டதாக அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O