அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.?

இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் திருவின் குரல். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 2 மணி நேர ரன்னிங் டைம் கொண்ட திருவின் குரல் திரைப்படம் எப்படி இருக்கிறது.? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மெடிக்கல் மாபியா குறித்த அடுத்தடுத்த படங்கள் தமிழ் சினிமாக்களில் நிறைய வந்துவிட்டன. மனித உறுப்புகளை திருடுவது, மருத்துவமனைகளில் நடக்கும் குற்றங்கள், இறந்தவர்களின் உடலை வைத்துக் கொண்டு மருத்துவர்கள் நடத்தும் கொடுமைகள் என்று தொடர்ந்து மருத்துவமனைகளை பற்றிய படங்கள் நிறைந வந்து விட்டன. ஆனால் இது அனைத்தும் மேல் மட்டத்தில் இருக்கும் டாக்டர்கள் செய்யும் மாபியா பற்றியதாக இருக்கும். ஆனால் தற்போது இந்த படத்தில் கடைநிலை ஊழியர்களாக வேலை பார்க்கும் சிலரை வில்லன்களாக சித்தரித்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு.

அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.? 1
ஏற்கன ஏற்கனவே அரசு மருத்துவமனைகளை செல்பவர்கள் குறைவு. இந்த படத்தில் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்களை கொலைகாரர்களாக, காம வெறி பிடித்தவர்களாக, கொள்ளைக்காரர்களாக இயக்குனர் காட்டியிருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் இன்னும் பயத்துடனே செல்ல வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அருள்நிதி தனது தந்தையுடன் கன்ஸ்ட்ரக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு வாய் பேச முடியாது. அருகில் வந்து பேசினால் மட்டுமே இவருக்கு காது கேட்கும். கான்ட்ராக்டராக இருக்கும் அப்பா பாரதிராஜாவிற்கு உதவி செய்து வருகிறார் அருள்நிதி. ஒருநாள் கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது சிமெண்ட் மூட்டை பாரதிராஜாவின் தலையில் விழுந்து அவருக்கு பயங்கர அடு படுகிறது. அப்போது அவரை தூக்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள் .அங்கு லிப்ட் ஊழியராக வேலை பார்க்கும் ஒருவருடன் அருள்நிதிக்கு மோதல் ஏற்படுகிறது. லிப்ட் ஊழியர், வார்டு பாய், செக்யூரிட்டி, மார்ச்சுவரி ஊழியர் என்று அனைவரும் பகலில் மருத்துவமனையில் வேலை செய்பவராகவும், இரவில் கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட 'கடைசி விவசாயி'. டாப் 25 படங்களில் தரவரிசையில் 2வது இடம்.!

அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.? 3
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலில் இந்த நால்வரும் சேர்ந்து போலி மருந்து உள்ள ஊசி ஒன்றை செலுத்துகிறார்கள. பின்னர் என்ன ஆனது? பாரதிராஜா என்ன ஆனார். அதை அருள்நிதி கண்டுபிடித்தாரா? தனது அப்பாவை கொல்லத் துடிப்பவர்களை அவர் பலி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்த படத்தில் வாய் பேச முடியாத அருகில் மட்டுமே இருந்து பேசினால் கேட்கும் திறன் கொண்ட கதாபாத்திரத்தில் அருள் நிதி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வார்த்தைகளில் பேச முடியாத கோபத்தை கண்களால் காட்டி நடிப்பில் அசத்தியிருக்கிறார். தனது வயதிற்கு மீறி பாரதிராஜா தற்போது நடிப்பில் அசத்தியிருக்கிறார், மருத்துவமனையில் உண்மையில் வலியால் துடிப்பவர் போலவே இவர் நடித்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே இது ஒரு அரசு மருத்துவமனையை சுற்றி நடக்கும் தில்லுமுல்லு வேலைகளை படமாக எடுத்துள்ளனர் என்று தெரிய வந்தது.

அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.? 5
ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மாபியாவில் ஈடுபட்டிருப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கதையை வேறு ஒரு விதமாக காட்டி இருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க சண்டை காட்சிகள் நிரம்பி வழிகிறது. அருள்நிதி சண்டை காட்சிகளை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் பெரிய அளவில் எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை வழக்கம் போல் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. திரைக்கதை பெரிதாக போர் அடிக்காமல் இருந்தாலும் மருத்துவமனையை சுற்றியே கதை நகர்ந்து வருவதால், ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது் மேலும் படம் முழுக்க பல லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது. திருவின் குரலும் அதிகமாக கேட்கவில்லை. மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் முகபாவனைகளிலேயே அசத்திய அருள்நிதியின் நடிப்பு, அப்பா மீதான செண்டிமெண்ட் ஒருபுறம், மறுபுறம் தனது குடும்பத்தை துன்புறுத்தும் வில்லன்களுடன் அதிரடி ஆக்சன் என்று இரண்டிலும் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார் அருள்நிதி.

விளம்பரம்
தொடர்புடையவை  தான் விளையாடிய Bat-ஐ யோகி பாபுவுக்கு பரிசாக அளித்த தோனி.! உருக்கமாக நன்றி சொன்ன யோகிபாபு.!

அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் திரைப்படம் எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ.? 7
படம் முழுக்க பாரதிராஜா பரிதாபப்படும் அளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கிறார். வில்லன்கள் அனைவருமே கோபம் வரும் அளவில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சிகள் எதார்த்தமான படத்தை பார்க்க போகிறோம் என்கிற உணர்வை கொடுக்கிறது. பின்னர் நேரம் செல்ல செல்ல அது கமர்சியலுக்கு மாறி விடுகிறது. இயல்பான எதார்த்தமான சென்டிமென்ட் படமாக ஆரம்பித்து பின்னர் கமர்சியல் ஆக்ஷன் படமாக முடித்துள்ள தெருவின் குரல் படத்தை லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து இருந்தால் திருவின் குரல் இன்னும் ஓங்கி ஒலித்திருக்கும். இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.75/5

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment