ஓரமாக நின்றிருந்த துப்புரவு பணியாளர்கள்..! தல அஜித் செய்த காரியம்.! அந்த மனசு தான் சார் கடவுள்

வெளியிட்டது

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக “தல” என்று அழைப்பதுண்டு. அன்று தொடங்கி பின்னர் பல படங்களில் நடித்து வந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது காதல் கோட்டை தான். ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்து வந்த அஜித்குமார் பின்னாளில் ஆக்ஷனில் இறங்கினார். அவர் தற்போது நடித்துவரும் அனைத்து படங்களுமே அக்ஷனை பின்னணியாகக் கொண்டதுதான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, வேதாளம், விசுவாசம், விவேகம், வலிமை போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக இறங்கி அசத்தியிருந்தார் தல அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘வலிமை’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே மீண்டும் அதே இயக்குனர் எச்.வினோத்துடன் இணைந்து தனது 61வது படத்தில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஓரமாக நின்றிருந்த துப்புரவு பணியாளர்கள்..! தல அஜித் செய்த காரியம்.! அந்த மனசு தான் சார் கடவுள் 1

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. தனது உருவத்தை வைத்து கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடையை வெகுவாக குறைத்து, ஜிம்முக்கு சென்று உடலை ஏற்றி, சால்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் செம கெத்தாக வலம் வருகிறார் நடிகர் அஜித்குமார்.
இது மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல போட்டிகளில் கைதேர்ந்தவராக இருக்கிறார். தற்போது கூட திருச்சியில் உள்ள ரைபிள் கிளப் என்ற இடத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு பல தங்கப்பதங்கங்களை குவித்துள்ளார் அஜித் குமார். படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் வெளிநாடு செல்வது, துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு செல்வது, பைக் ரேஸ் செல்வது என்று தன்னை பிஸியாக வைத்து வருகிறார் அஜித். அவரது வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம்.

அஜீத் எங்கேயாவது செல்லும்போது அவரை மறைமுகமாக வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருவது வழக்கம். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஏதோ ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். அப்போது பேச்சு மும்முரத்தில் அங்கு ஓரமாக நின்றிருந்த துப்புரவு பணியாளர்களை கவனிக்காமல் சென்று விடுகிறார். அவர்களை கடந்து விட்ட பிறகு அவர்கள் வணக்கம் வைத்ததை கவனித்து விட்டு திரும்பி ஒரு நிமிடம் என்று அவர்களுக்காக வணக்கம் வைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். துப்புரவு பணியாளர்களை மதித்து அவர் செய்த இந்த செயலை பார்த்து அந்த மனசு தான் சார் கடவுள் என்று பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below video..

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்