Categories: சினிமா

Thalaivar 170 Update வெளியான புது தகவல் | Rajinikanth | Arun Kamaraj

வெளியிட்டது

சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் என்பது உலகம் அறிந்த ஒன்று! அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ஒரே ஒரு நட்சத்திர நடிகர் என்றால் அந்த ரஜினிகாந்த் அவர்கள் தான்! கண்டக்டராக இருந்து கலைத்துறையில் அடியெடுத்து வைத்து வெற்றி பாதையில் உலா வரும் இவர் ஒரு சாதனையாளர் என்றால் அது மிகையாகாது! சமீபத்தில் கூட இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒன்றே! ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! கர்நாடகாவில் பஸ் கண்டக்டர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கி தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் திரைத்துறையில் கால் பதித்த சூப்பர் ஸ்டார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 70 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டு வந்த வண்ணம் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

Thalaivar 170 Update வெளியான புது தகவல் | Rajinikanth | Arun Kamaraj 1

பொதுவாகவே திரைத்துறையில் வெற்றி படங்கள் வரிசையாக கொடுத்து வந்தால் அடுத்தடுத்த படங்களில் அரசியல் தெளித்து படங்கள் வெளியாவது சகஜம் தான்! அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அரசியல் ஒரு காலம் பேசப்பட்டிருப்பதும் நமக்கு தெரிந்த விஷயமே! சூப்பர்ஸ்டார் புகழ்கொடி பறந்து வந்த நேரத்தில் இவர் அரசியலுக்கு வரும் அறிகுறிகள் அபரிமிதமாக தெரிந்தாலும் அரசியல் பேசிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுக்களும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்தது! அரசியலுக்கு வர போகிறேன், வெற்றிடம் உள்ளது, சிஸ்டம் சரியில்லை என்று பேசி வந்த ரஜினிகாந்த் பிறகு கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் அறிவிப்பில் இருந்து பின் வாங்கினார். Youtube Video Code Embed Credits:  Cineulagam

தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் சன் குழுமம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் Thalaivar 169 என்ற படத்தில் நடிக்கிறார். அதற்க்கான glimpse சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. அடுத்த படியாக ரஜினிகாந்த் அருண் காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. Thalaivar 170 படத்திற்க்காக கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கிய அருண் காமராஜிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இதன் அதிகாரபூர்வ தகவல் சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Watch the Below Video…

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்