KGF 3 எப்போன்னு தெரியுமா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் | KGF

கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ஒரு படம்தான் கேஜிஎஃப். இந்த படத்தின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார் யாஷ் என்று சொன்னால் அது மிகையில்லை. 2018ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் பாகம் கொடுத்த வெற்றி இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

KGF 3 எப்போன்னு தெரியுமா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் | KGF 1

விளம்பரம்

சமீபத்தில் இரண்டாம் பாகம் வெளியாகி நைட் ஷோ கூட ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடிக் கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் மெஹபூபா பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி யூடியூப்பில் ட்ரெண்டிங் 1ல் இருந்து கொண்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. மாடல் ஆக இருந்த இவர் கேஜிஎஃப் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் இவரது நடிப்பும் மெஹபூபா பாடலும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன.
இந்த படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்ற செய்தியோடு இரண்டாம் பாகம் முடிகிறது. இதனால் கேஜிஎஃப் 3 குறித்த ஆவல் மக்களிடையே வெகுவாக எழுந்துள்ளது. Youtube Video Code Embed Credits: Thanthi TV

KGF 3 எப்போன்னு தெரியுமா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் | KGF 3

விளம்பரம்

கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் படபிடிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேட்டியளித்துள்ள தயாரிப்பாளர் விஜய் வருகிற அக்டோபர் மாதத்தில் பாகம் 3 படப்பிடிப்பு தொடங்கும் என்றும், மார்வெல் படங்கள் போன்று கேஜிஎஃப் படத்திலும் விதவிதமான கதாபாத்திரங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாகத்தை 2024ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் கேஜிஎஃப் ரசிகர்களும், யாஷ் ரசிகர்களும் மிகுந்த குஷியில் உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video

தொடர்புடையவை  ஆக்ஷன் ஹீரோவாக மாறி பட்டையை கிளப்பும் துல்கர் சல்மான்.! கிங் ஆஃப் கோதா டீசர் இதோ..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment