Categories: சினிமா

என்ன நண்பா அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா? தளபதி 67 பற்றி மரண மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.!

வெளியிட்டது

தளபதி 67 பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் 7 கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இன்று மாலை 6.07மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று 7 கிரீன் ஸ்டுடியோவின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் தளபதி 67 ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். வாரிசு படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பின்னர், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். இந்த படம் வெளியாகி சுமார் 16 நாட்களில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை நெருங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து தளபதி, தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில், அது குறித்து எந்தவிதமான செய்திகளும் வெளியே வராமல் இருக்கிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் இதுகுறித்து கேட்கப்பட்டதால் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து கூட சில காலத்திற்கு விலகி இருந்தார்.

என்ன நண்பா அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா? தளபதி 67 பற்றி மரண மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.! 1

தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான பின்னர் தான் இந்த படம் குறித்து உங்களிடம் தெரிவிப்பேன் என்று தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறி வருகிறார் லோகேஷ். இருந்தபோதிலும் ரசிகர்கள் அதீத ஆர்வத்தின் காரணமாக அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் மைக்கேல் பட விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் தளபதி 67 படத்தின் அப்டேட் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். மேலும் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்காக காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு ஒரு சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருந்தார் லோகேஷ். அதுபோல 67 படத்திற்கும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசருடைய படப்பிடிப்பு தான் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கொடி கட்டி பறக்கிறது. மேலும் லோகேஷ் யுனிவர்சில் விக்ரம் இணைகிறாரா? என்ற கேள்விக்கு, லோகேஷ் இப்பொழுதே சொன்னால் சர்ப்ரைஸ் போய்விடும், படத்தின் அப்டேட் வரும் பொழுது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். லோகேஷ் மறுப்பு தெரிவிக்காததால் அந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று நம்புகின்றனர் விஜய் ரசிகர்கள்.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் இன்று மாலை 6.07 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தை தயாரிக்கும் 7 கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.! அதில் படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்தும், நான்காவது முறையாக அனிருத் தளபதி 67 படத்திற்கு இசை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்டர்க்கு பிறகு மீண்டும் லோகேஷுடன் இணைவதில் மகிழ்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர் பற்றிய தகவல் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்