பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னம் தன்னை அணுகியபோது, அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாக அமலாபால் கூறியிருக்கும் விஷயம் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எம்ஜிஆர், கமலஹாசன் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஆசைப்பட்ட கதையில் அமலாபால் நடிக்க மறுத்து மறுத்து இருக்கும் விஷயம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழின் மிகப் பிரமாண்ட நாவலாக இருக்கும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் மணி ரத்னம். இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் மணிரத்னம் இயக்கியிருக்கிறார். தமிழர்களின் வாழ்வியலையும், சோழர்களின் வீரத்தையும், அவர்கள் அறிய அரியணைக்கு வந்த ஆபத்தை தடுத்து நாட்டை எவ்வாறு காத்தார்கள் என்பது குறித்த கதை தான் பொன்னியின் செல்வன். அந்த சரித்திர படத்தில் நடிக்க பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர். குறிப்பாக எம்ஜிஆர், கமலஹாசன், ரஜினி போன்றவர்கள் இந்த படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் இந்த படத்தில் தமக்கு வந்த வாய்ப்பை அமலா பால் மறுத்துவிட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்து விடாதா என்று பலரும் ஏங்கி தவிக்க அமலாபால் ஏன் மறுத்தேன் என்ற காரணத்தையும் விளக்கி இருக்கிறார்.

நான் மணிரத்தினத்தின் மிகப்பெரிய ரசிகை. அவர் பொன்னியின் செல்வன் ஆடிஷனுக்கு தன்னை அழைத்த போது நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், ஆனால் அப்போது அந்த சூட்டிங் நடைபெறவில்லை. அது எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது என்று அமலா பால் கூறினார். மேலும் 2021 ஆம் ஆண்டு மீண்டும் இந்த சூட்டிங்கில் கலந்து கொள்ள அவர்கள் என்னை அழைத்த போது, நான் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். அப்போது எனக்கு மனரீதியாக பல பிரச்சினைகள் இருந்தது, அதனால் என்னால் சரியாக செய்து முடிக்க முடியாது என்பதால் மறுத்துவிட்டேன். இதற்காக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்டால் இல்லை, சில சமயங்களில் நாம் எடுக்க முடிவு சரியாக இருக்கும் என்று அந்த பேட்டியில் அமலா பால் கூறி இருக்கிறார். மேலும் பொருத்தமில்லாத ரோலில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாக விருப்பம் இல்லை, மணிரத்னம் சாரின் அடுத்த படத்தின் நடிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் பட ட்ரெய்லர் வெளியீட்டின் போது பேசிய ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு சின்ன ரோலாவது கொடுங்கள் என்று நான் மணிரத்னத்திடம் மன்றாடினேன், அந்த பழுவேட்டைரையர் ரோலாவது கொடுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்று ரஜினிகாந்த் பேசினார். சூப்பர் ஸ்டார் தொடங்கி பலரும் வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அமலாபால் கிடைத்த வாய்ப்பை மறுத்து இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Cineulagam