நாம பாட்டுக்கு நதி போல ஓடிட்டே இருக்கணும்!!அனிமேஷனில் வெளியான விஜயின் “நதி”குட்டி ஸ்டோரி!! சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ள மாஸ்டர் படக்குழு!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் இப்போதைய உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். கலவையான விமர்சனம் பெற்றாலும் இவருடைய படங்கள் எளிதாக 200 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. பல நல்ல விமர்சங்களை பெற்றாலும் முன்னணி நாயகர்கள் சிலரால் கூட இந்த வசூலை எட்ட முடியாத நிலை உள்ளது. இதற்கு சான்று அண்மையில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயுடன், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,வி.டி.வி கணேஷ் என பலர் நடித்த இந்த படம் மிகவும் கலவையான விமர்சங்களையே பெற்றது. இருப்பினும் இந்த ஆண்டின் இப்போதைய அதிக வசூல் செய்த தமிழ் படமாக 230 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்துளளது இந்த படம்.

விஜய் கேரளாவிலும் பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். அதே போல இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவர் தன்னுடைய அடுத்த படமான “T66” படத்தில் பணியாற்றும் பலரையும் தெலுங்கில் அதிகம் அறியப்பட்டவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரான வம்ஷி படிப்பள்ளியுடன் கை கோர்த்துள்ளார் விஜய்.

நாம பாட்டுக்கு நதி போல ஓடிட்டே இருக்கணும்!!அனிமேஷனில் வெளியான விஜயின் "நதி"குட்டி ஸ்டோரி!! சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ள மாஸ்டர் படக்குழு!! 1

இவர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான “மஹரிஷி” என்ற 2019ஆம் படத்திற்காக சிறந்த முழு பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றவர் ஆவார். அதே பெரிய தயாரிப்பாளரும், விநோயிகிஸ்தருமான ‘தில்’ ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.  இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள விஜயும், “தில்” ராஜுவும் இயக்குனர் வம்சிக்கு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளனர். குடும்பப்பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விஜயுடன் நிறைய தெலுங்கு நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்பொது தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நாயகியான ரஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தமன், காமெடி நடிகர் பிரமானந்தம், துணை நடிகர் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ் என நிறைய தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான, பரிட்சியமான முகங்கள் படத்தில் பலர் உள்ளனர். அவர்கள் போக தமிழ் ரசிகர்களுக்காக சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஷியாம் போன்றோரும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோஸில் செட் அமைத்து துவங்கிய படப்பிடிப்பு இப்பொது சென்னையில் 2வது கட்டப்படப்பிடிப்பை துவங்கியுள்ளது. துவங்கிய முதலே படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. இப்பொது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை குஷ்பூ, ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜயின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் படக்குழு அதனை குறித்து எந்த வித அச்சமும் இன்றி அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்முரமாக நடந்து வருகிறது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கொண்டு வர ஆயுதமாகி வருகிறது படக்குழு. இதனால் விரைவில் அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகளையும் மேற்கொள்ள தயராகிருக்கிறார்கள்.

முதல் கட்டமாக வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் விஜயின் பிறந்தநாளில் அவர் அடுத்து நடிக்கும் படங்களின் அறிவிப்புகள் வெளியாவது வழக்கமே. அதற்கு இந்த வருடமும் எந்த வித மாற்றமும் இல்லை என்றாலும், இந்த வருடம் படக்குழு கொஞ்சம் சிக்கலில் உள்ளது. படத்திற்கு தமிழில் “வாரிசு” எனவும் தெலுங்கில் “வார்சுடு” எனவும் பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த தலைப்பு பற்றிய செய்திகள் வெளியானதால் உடனே மேலும் வம்சம், குடும்பம் போன்ற பெயர்களையும் தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இன்று மாலை 6:01 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்ற ஆண்டு வெளியான நடிகர் விஜயின் மாஸ்டர் படகுழு அவருக்கென தனியாக சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுளள்து. அனிமேஷன் விடியோவான இதில் நடிகர் விஜய் பேசிய ஆடியோ லாஞ்சில் வரும் “நதி” பற்றிய குட்டிக்கதையை மையமாக கொண்டு இந்த வீடியோ வெளியாகி இப்பொது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Video Courtesy – 7 screen studios

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்