தளபதியின் Beast படத்தில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்? உற்சாகத்தில் ரசிகர்கள்

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

தளபதியின் Beast படத்தில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்? உற்சாகத்தில் ரசிகர்கள் 1

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக Beast படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து நேற்று விஜய் விமான நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோ சமோகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை பற்றி மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் guest ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியதுள்ளது. இந்த தகவலை கேட்ட தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்தாலும் , அதிகார பூர்வமான தகவல் ஏதும் வெளிவரவில்லை.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்