First Look கூட வெளிவராமல் பாகுபலியின் சாதனையை தூக்கி சாப்பிட்ட வலிமை!

பொதுவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படம் ஒரு வருடத்திற்கு ஒரு படமாவது திரைக்கு வரும். ஒரு சில நடிகர்களின் படம் வருடத்திற்கு மூன்று நான்கு படங்கள் கூட வெளிவரும். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் ஏராளமான ரசிகர்கள் கொண்டவரான அஜித் படம் கடந்த ஒரு வருடமாக வெளிவரவில்லை அது மட்டுமல்லாமல் படத்தை பற்றிய தகவல் கூட வெளியிடவில்லை. படத்தின் பெயர் மட்டும் அறிவித்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தல அஜித்தின் தோற்றம் படத்தில் எப்படி இருக்கும் என்றெல்லாம் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

First Look கூட வெளிவராமல் பாகுபலியின் சாதனையை தூக்கி சாப்பிட்ட வலிமை! 1

வலிமை என்று படத்தின் பெயர் மட்டும் வைத்தே இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே சமூக வலைத்தளத்தில் ஏராளமான சாதனைகள் ரசிகர்கள் நிகழ்த்தியுள்ளனர். அவற்றில் ஒன்று தான் சமீபத்தில் புக் மை ஷோ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் இந்த படத்திற்கான விருப்பத்தை பதிவு செய்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை பாகுபலி படத்தின் பதிவை முறியடித்துள்ளது. வலிமை இரண்டு லட்சம் விருப்பப்திவு பெற்றுள்ளது. முதல் இடத்தில் அவஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற படம்,உள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  "தண்ணீர் பாட்டில் முதல் டிரஸ் கோட் வரை"!! அசத்தலாகவும், ஆடம்பரமாகவும் நடைபெறும் விக்னேஷ் நயன்தாராவின் மெஹெந்தி ஃபங்க்ஷன்!!!
First Look கூட வெளிவராமல் பாகுபலியின் சாதனையை தூக்கி சாப்பிட்ட வலிமை! 3

இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளிவருவதற்கு முன் இத்தகைய சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் நமது தல அஜித்தின் வலிமை படம் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ட்விட்டரிலும் வலிமை அப்டேட் என்ற ஹாஷ் டேக்குகளும் ட்ரேண்டிங்கிலே உள்ளது. அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஜுலை இறுதியில் இருந்து அப்டேட் குவியப்போகிறது. ஜுலையில் படப்பிடிப்பு முடிந்து படம் இந்த வருடத்திற்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.

First Look கூட வெளிவராமல் பாகுபலியின் சாதனையை தூக்கி சாப்பிட்ட வலிமை! 5
விளம்பரம்

Leave a Comment