Categories: சினிமா

திடீரென வெளிநாட்டுக்குச் சென்ற தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ இதோ.!

வெளியிட்டது

லியோ படத்தின் சூட்டிங் பணிகளை முடித்த தளபதி விஜய் தற்போது வெளிநாட்டுக்கு பயணம் ஆகி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் அவர் தனது அரசியல் பணிகளை ஆரம்பிப்பார் என்கிற தகவலும் தற்போது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர் தளபதி விஜய். சிறுவயதிலிருந்தே நடிக்க தொடங்கி தற்போது தமிழில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

திடீரென வெளிநாட்டுக்குச் சென்ற தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ இதோ.! 1
படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோ லாஞ்சை செப்டம்பர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, இயக்குனர் மிஷ்கின், சஞ்சய்தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். லியோ படத்தில் தற்போது தன்னுடைய பகுதிகளை நிறைவு செய்து இருக்கிறார் விஜய். இதனால் ஓய்வுக்காக குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல இருக்கிறார். அவர் எந்த நாட்டிற்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அவர் தற்போது விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளிடம் சோதனை செய்துவிட்டு அவர் உள்ளே செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. சில தினங்கள் வெளிநாட்டில் நேரம் செலவிட்டு விட்டு மீண்டும் சென்னைக்கு வரும் அவர் இசை வெளியீட்டு விழாவை முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது அடுத்த படமாக 68-வது படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், நடிப்பை தாண்டி விஜய் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட முதல் மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளை அழைத்து அவர்களின் கல்விக்காக உதவியிருந்தார். மேலும் இரவு நேர பாடசாலைகளையும் திறந்து மாணவர்களின் கல்விக்காக சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் விஜய்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து மாதத்திற்குள் தேர்தல் வர இருக்கும் நிலையில் அவர் 68 ஆவது படத்தில் உடனே நடிக்க ஒப்பந்தம் ஆவாரா? அல்லது அரசியலில் இறங்குவாரா என்பது தெரியவில்லை. இதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்