Categories: சினிமா

கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற தளபதி விஜய்..! கேப்டன் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கிய தளபதி..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் சினேகா , மீனாட்சி , பிரபுதேவா , மைக்மோகன் பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற தளபதி விஜய்..! கேப்டன் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கிய தளபதி..! 1

வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் இப்படத்தை காண பெரும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரட்டிப்பு மடங்கு ஆனது.

இந்நிலையில் நடிகர் விஜய் , தயாரிப்பாளர் அர்ச்சனா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து விஜயகாந்தை இப்படத்தில் ஏஐ மூலம் கொண்டு வர அனுமதி கொடுத்ததற்கு நன்றி கூறி உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது .

 

வெளியிட்டது

புதிய செய்திகள்