யோகிபாபு மற்றும் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு தளபதி விஜய் buggy எனப்படும் காரை ஒட்டிக்கொண்டு ரைடு போகும் வீடியோவை யோகிபாபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் 66-வது படமாக உருவாகியிருக்கும் படம் தான் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு ஷியாம் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வசூல் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகி ஏழு நாட்கள் முடிவில் 210 கோடியை வசூலை பெற்றிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. பின்னர் 13வது நாள் முடிவில் 250 கோடி வசூல் செய்து இருந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தை தயாரித்து இருந்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் விஜய் அஜித் ஆகிய இருவரின் படங்கள் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகி இருப்பது இந்த முறைதான். இந்த பொங்கல் வாரிசு பொங்கலா? அல்லது துணிவு பொங்கலா? என்ற சர்ச்சையுடன் இரண்டு படங்களும் வெளியானது. இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் யோகிபாபு மற்றும் சில நண்பர்களை அழைத்துக்கொண்டு தளபதி விஜய் buggy எனப்படும் காரை ஒட்டிக்கொண்டு ரைடு போகும் வீடியோவை, யோகிபாபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சமீபத்தில் நடிகர் ஷ்யாமை அழைத்துக்கொண்டு அதே போல ரைடு சென்று இருந்தார் தளபதி. அந்த வீடியோவை வெளியிட்டு இருந்த ஷ்யாம் “பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி” என்று பகிர்ந்து இருந்தார். இதையடுத்து யோகிபாபு இன்று புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.அந்த வீடியோவில் buggy காரை ஓட்டிக்கொண்டே எல்லாரும் வரலையா என்று கேட்கிறார் தளபதி. தற்போது அந்த வீடியோ ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O