தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில் அமர்ந்து இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கிறது. மிகப்பெரிய வசூல் ஓப்பனிங்கை கொண்ட நடிகர் விஜய் , கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு அவர் சினிமாவை விட்டு வெளியேற உள்ளார்.

தற்போது அவர் தொடங்கி இருக்கும் கட்சியின் மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தொண்டர்கள் காலை முதலே மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது வெயிலில் வந்து அனைவரும் அமர்ந்து இருக்கும் நிலையில், விஜய் மாநாட்டை சீக்கிரமாகவே நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை காண மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் அவர் யாருக்கும் தெரியாமல் மாநாடு திடலுக்கு வந்து உள்ளார். மாநாட்டில் வேலைகள் சரியாக நடக்கிறதா என ஆய்வு செய்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.