தன்னை பார்க்க விரும்பிய குழந்தைக்காக தளபதி விஜய் வீடியோ கால் செய்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ தளபதி பாடிய அங்கிளை வர சொல்லு என்று அந்த குழந்தை சில மாதங்களுக்கு முன்பு அழுது அடம் பிடிக்க தற்போது அந்த குழந்தையை பார்க்க தளபதியே வீடியோ கால் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி விஜயின் 67வது படமான லியோ படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்க இருப்பதாக பல குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் அறிவிப்பு வெளியான பிறகு, படத்தின் டைட்டிலை ஒரு குட்டி டீசருடன் அறிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் சாக்லேட் ஃபேக்டரி ஒன்றில் இருக்கும் விஜய் சாக்லேட்டையும், கத்தியையும் ஒருசேர செய்கிறார். அப்போது அந்த ஃபேக்டரியை எதிரிகள் சுற்றி வளைக்கின்றனர். உடனே கத்தியை எடுத்துக்கொண்டு அதை சாக்லேட் ட்ப்பில் நனைத்து பிளடி ஸ்வீட் என்று கூறுகிறார். இந்த டீசர் வெளியாகி நான்கு நாட்களில் சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்தது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்து இருந்தது. லோகேஷ் கனகராஜீன் யூனிவர்ஸ் இந்த படத்தில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தளபதியின் Cute வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
தளபதி நடிப்பில் கடைசியாக உருவாகி இருந்த படம் வாரிசு. குடும்ப உறவுகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் படத்தின் பாடல்களுக்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் மாஸாக இருந்தன. சிறு குழந்தைகள் கூட இந்த பாடல்களை விரும்பி பார்க்கத் தொடங்கினர்.அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை தீ தளபதி பாடிய அங்கிளை வர சொல்லு என்று அழுது அடம் பிடித்துள்ளது. இந்த விஷயம் தளபதி காதுகளுக்கு எட்டவே தற்போது தளபதியே அந்த குழந்தைக்கு போன் செய்து பேசியுள்ளார். வீடியோ காலில் வந்த தளபதி குழந்தையிடமும் அந்த குடும்பத்திடமும் மிக கனிவாக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் தளபதி மனசே மனசுதான் என்று பாராட்டி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O