பிக்பாஸ் தாமரைச்செல்வி தற்போது குடல் குழம்பு வைத்து தனது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய விருந்து ஒன்று வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் தாமரை வைத்த குடல் குழம்பை பார்த்தால் நமக்கே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். கோவில் திருவிழாக்களில் மேடை நாடகங்களில் பங்கெடுத்ததன் மூலமாக பிரபலமானவர் தாமரைச்செல்வி. இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக் பாஸ் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் அறியப்படும் ஒரு நபராக வலம் வருகிறார் தாமரை. இந்த நிகழ்ச்சியில் எளிய குடும்பத்தின் பின்னணியில் இருந்து ஒருவர் சென்று பலரின் மனங்களை ஒருவர் வென்றிருக்கிறார் என்று சொன்னால் அது தாமரைச்செல்வியை சேரும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எண்ணியிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் தாமரை. பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை, பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் தாமரை. இருந்தபோதிலும் மனம் தளராமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் முடிந்த பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றில் கூட அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கும் தாமரைச்செல்வி தொடர்ந்து ஏதாவது ஒரு வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் தனது குடும்பத்திற்காகவும் தனது பிள்ளைகளுக்காகவும் குடல் குழம்பு செய்வது எப்படி என்று செய்து காட்டி அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். வீட்டிலேயே குடலை வாங்கி அதை சுத்தம் செய்து குழம்பு வைத்துக் காட்டி இருக்கிறார் பிக் பாஸ் தாமரை. தற்போது அந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது, லட்சக்கணக்கான மக்கள் அந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Lotus Family