கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.!

கேப்டன் விஜயகாந்தின் தந்தைக்கு 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அந்த புகைப்படங்களை கேப்டன் விஜயகாந்தின் மகன்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். 1979 ஆம் ஆண்டு அகல் விளக்கு என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.! 1

விளம்பரம்

அனைவரும் தங்களுடைய நிறத்தைப் பற்றி கவலை கொண்டிருக்கும் நிலையில் திறமைக்கு நிறம் ஒரு பொருட்டே இல்லை என்று திரைத்துறையில் வந்து சாதித்து காட்டியவர். அதன் பின்னர் இவர் பல நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்னும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் கேப்டன் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.! 3

விளம்பரம்

பின்னர் 2005ஆம் ஆண்டு திமுக அதிமுக என்னும் மிகப்பெரிய இரண்டு துருவங்களை எதிர்த்து அரசியலில் தனியாளாக களம் இறங்கினார். யாருக்கும் பயப்படாமல் தனது கருத்துக்களை முன் வைப்பதிலும், மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் இருந்த விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே 10 சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உருவெடுத்தார்.

தொடர்புடையவை  சர்வேதச திரைப்பட விழாவில் 'விடுதலை' படத்தை கொண்டாடி தீர்த்த மக்கள்.! சூரி வெளியிட்ட வீடியோ.!

கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.! 5

விளம்பரம்

மேலும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் நிகழ்ந்த சில விரும்பத்தகாத செயல்களால் கேப்டனின் அரசியல் வாழ்க்கை சரிவை சந்தித்து. கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இந்தத் தொடர் தோல்விகளால் கேப்டன் விஜயகாந்த்தும் வீட்டிலேயே முடங்கி போய்விட்டார்.

கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.! 7

விளம்பரம்

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வந்து தேசியக்கொடி ஏற்றுவது, கட்சியின் துவக்க விழா மற்றும் சிறப்பு விழாக்களில் வந்து கட்சிக்கொடி ஏற்றுவது என்று அவ்வப்போது வெளியில் தலை காட்டிக் கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் நடக்க முடியாமல் சிரமப்படும் கேப்டனின் நிலைமையை பார்த்த பலரும் கண்ணீர் வடித்தனர்.

கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.! 9

விளம்பரம்

சிங்கம் போல் இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே என்று பலரும் தங்களது ஆதங்கங்களை கொட்டி வருகின்றனர். தற்போது அவர் வீட்டிலேயே முழு நேரமாக ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய தந்தை அழகர்சாமியின் நூறாவது பிறந்தநாள் தற்போது அவரது வீட்டில் கொண்டாடப்பட்டிருக்கிறது. வீட்டில் உள்ள அனைவருடனும் இணைந்து கேப்டன் தனது தந்தையின் 100வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

தொடர்புடையவை  சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று படத்துடைய டீசர் வெளியீடு!!

கேப்டன் விஜயகாந்தின் அப்பாவை பார்த்து இருக்கீங்களா..? முதல் முதலாக வெளியான புகைப்படம் இதோ.! 11

விளம்பரம்

இந்தப் புகைப்படங்களை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தனது தந்தையாரின் உருவப் படத்திற்கு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மகன்கள் ஆகியோர் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

விளம்பரம்

இந்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்த விஜய பிரபாகரன் எங்களது தாத்தாவின் நூறாவது பிறந்த நினைவு நாள். குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஒன்றாக சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு நல்ல நிகழ்வு என்று அவர் அந்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment