நடிப்பில் பின்னி எடுக்கும் தாமரை! டான் படத்தின் வசனத்தை அப்படியே பேசி காட்டிய தாமரை ஐக்கி..!

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியை தெரியாதவர்களே இருக்க முடியாது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5ல் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்கள் தான் தாமரை மற்றும் ஐக்கி பெரி. இருவரும் பிக்பாஸில் கலந்து கொண்ட பின்பு மிகவும் பிரபலமானார்கள். நாடக கலைஞராக இருந்த தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவரது எதார்த்தமான கிராமத்து பேச்சும், செயலும் பலரையும் ரசிக்க வைத்தது. என்ன விளையாட்டு என்று தெரியாமலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திறமையாக விளையாடி மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்றார். இவரே வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால் இவர் பிக்பாஸிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும், தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் பங்கேற்று அசத்தி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நடிப்பில் பின்னி எடுக்கும் தாமரை! டான் படத்தின் வசனத்தை அப்படியே பேசி காட்டிய தாமரை ஐக்கி..! 1

இதே போல் பிக்பாஸ் சீசன் 5ல் மற்றொரு முக்கியமான போட்டியாளர் ஐக்கி பெரி. மேலை நாடுகளில் இருப்பது போல ரேப் பாடல்களை தமிழ் மொழியில் பாடும் ஒரு திறமை படைத்த பெண். இவர் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர் என்றாலும் ஆள் பார்ப்பதற்கு வெளிநாட்டவர் போல் இருப்பார். தொழில் முறையில் மருத்துவரான இவர், பாடல் மீது கொண்ட காதலினால் அதனை முறைப்படி கற்றுக்கொண்டு, ராப் பாடல்களை பாடினார். தமிழ் மொழியில் ராப் பாடல்கள் அதுவும் ஒரு பெண் பாடுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. எனவே இவருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெருகியது. ஆனால் இவருக்கும் பிக்பாஸில் போதிய வரவேற்பு இல்லாததால் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் இவரும் மனம் தளராமல் பிக்பாஸ் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வருகிறார்.

இவரும் தாமரைச்செல்வியும், அடிக்கடி நடனமாடியும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்தும் வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டான் படத்தில் சிவகார்த்திகேயனும், சூரியும் பேசிம் கல்லூரி வசனத்தை அப்படியே பேசிக் வீடியோ வெளியிட்டுள்ளனர். தாமரை சூரி மாதிரியும், ஐக்கி பெரி சிவகார்த்திகேயன் மாதிரியும் அந்த வசனத்தை பேசியுள்ளனர். இதை பார்த்த பல ரசிகர்கள் தாமரை மிக நன்றாக நடிப்பதாகவும், அடுத்து கண்டிப்பாக சினிமாவில் களமிறங்கி விடுவார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube video code embed credits: Viral Videos

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்