பிக்பாஸ் பிரபலம் தாமரைச்செல்வியும் அவரது கணவரும் நடுக்காட்டில் நாட்டுக்கோழியை அடித்து பிரியாணியும் கோழி வறுவலும் செய்துள்ள வீடியோவை அவர் தற்போது தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நிறைந்த ஒருவர் தான் தாமரைச்செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் குடும்ப வறுமையின் காரணமாக நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறுவயதிலேயே குடும்பத்தின் பாரத்தை சுமக்க தொடங்கிய தாமரைச்செல்வி, தனது முழு நேர வேலையாக நாடகத் தொழிலில் ஈடுபட்டார். இதற்காக அவர் ஒவ்வொரு ஊராக தனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு தனி ஒரு பெண்ணாக அலைந்து திரிந்தார். அப்படி கஷ்டப்பட்ட ஒருவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்த ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தாமரைச்செல்வியின் வாழ்க்கை முறை மாறியது. அவர் பலராலும் அறியப்பட்ட ஒரு பெண்மணியாக இருக்கிறார். சீசன் 5ல் ஒரு போட்டியாளராக அவர் கலந்து கொண்டார். பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இந்த இரண்டு நிகழ்ச்சியிலும் அவரால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இருப்பினும் மனம் தளராமல் அடுத்ததாக பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆடவே தெரியாத தனது கணவருடன் அவர் நடனம் ஆடி வந்தார். இந்த போட்டியிலும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார் தாமரைச்செல்வி. தற்போது லோட்டஸ் ஃபேமிலி என்கிற ஒரு youtube சேனலை ஆரம்பித்து இருக்கிறார்.
இந்த சேனல் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அவருக்கு பல லட்சம் பார்வையாளர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பல ஆயிரம் பின் தொடர்பவர்களும் கிடைத்திருக்கிறார்கள். தற்போது தாமரையும், அவரது கணவரும் சேர்ந்து நடுக்காட்டில் வைத்து கோழி கறி பிரியாணி செய்து அசத்தியிருக்கின்றனர். மேலும் நாட்டுக்கோழி வறுவல் செய்து இருக்கின்றனர். அந்த வீடியோவை அழகிய பதிவாக அவர்கள் அது youtube பக்கத்தில் பதிவேற்றி இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television