மீன் குழம்பு வைத்து அசத்திய தாமரை.. குழம்பு பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கே

வெளியிட்டது

திண்டுக்கல்லை சேர்ந்தவர் தாமரைச் செல்வி. இவர் குடும்ப வறுமையின் காரணமாக நாடகத் தொழிலுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டது. குடிசை வீட்டில் பிறந்து வளர்ந்த இவர் தன் தம்பி தங்களைகளை படிக்க வைப்பதற்காக சிறு வயதிலேயே நாடகத்தில் நடிக்க சென்று விட்டார். அன்று தொடங்கி தெருக்களில் போடப்படும் தெருக்கூத்து நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மிக திறமையாக விளையாடி வந்தார். பலரும் தாமரை வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினர். ஏழ்மை நிலையில் இருந்து பிக்பாஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் கலந்து கொண்டு மிக சிறப்பாக விளையாடினார். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, குறைந்த வாக்குகள் பெற்றே வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மீன் குழம்பு வைத்து அசத்திய தாமரை.. குழம்பு பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கே 1

பின்னர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதிலும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. என்ற போதிலும் மனம் தளராமல் அடுத்த கட்டமாக பிபி ஜோடிகள் என்று நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடனம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தன் கணவரையும் கட்டாயப்படுத்தி நடனத்தை கற்றுக் கொள்ள வைத்து அவருடன் இணைந்து நடனமாடி வந்தார் தாமரைச்செல்வி. ஆனால் இதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தபோதிலும் அனைவரின் மனம் கவர்ந்த போட்டியாளராக தாமரையும் அவரது கணவரும் இருந்து வந்தனர்.

தற்போது youtube சேனல் ஒன்றை தொடங்கியிருக்கும் தாமரைச்செல்வி. அப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட தனது வீட்டைச் சுற்றி காட்டி அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அவர் மீன் குழம்பு வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்தாலே நமக்கும் மீன் குழம்பு சாப்பிட வேண்டும் என்று ஆசை வருகிறது.அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Lotus Family

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்