அமீர் பாவனியை தொடர்ந்து தாமரைக்கும் திருமணம் செய்து வைத்த விஜய் டிவி.!

வெளியிட்டது

அமீர் பாவனியை தொடர்ந்து தாமரை மற்றும் அவரது கணவருக்கும் விஜய் டிவி திருமணம் செய்து வைத்துள்ளது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5-ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரை. சாமானிய மக்களில் ஒருவராக கிராமத்தில் இருந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்ற போட்டியாளராக இவர் இருந்தார். தாமரை செல்வி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, சிறு வயதில் முதல் அடிப்படை தேவைகளுக்கும் அலைந்து திரிந்து படாத கஷ்டப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தெருக்கூத்து நாடகத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வந்த தாமரை, பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி துளியும் தெரியாமல் அனைவரையும் விட சிறப்பாக விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அமீர் பாவனியை தொடர்ந்து தாமரைக்கும் திருமணம் செய்து வைத்த விஜய் டிவி.! 1

இப்படிப்பட்ட குடும்ப சூழலில் வளர்ந்த தாமரையின் அம்மா மற்றும் சகோதர, சகோதரிகளின் குடும்பம் இன்னும் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. தாமரையின் அம்மா ஒரு சிறு குடிசை வீட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மழைக்காலங்களில் பூச்சிகள் வரும் என்பதால் அருகில் உள்ள பள்ளிகள் அல்லது கோவில்களில் சென்று உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் தாமரையின் தாயார். ஒரு பேட்டியின் போது நாடகத்தில் கிடைக்கும் பணத்தை 200 அல்லது 300 ரூபாய் தான் கிடைக்கும் அதை அப்படியே கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிடுவார், இன்று வரை அவர்தான் எங்களைப் பார்த்து கொள்கிறார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த தாமரைக்கு ஆரம்பம் முதலே வாழ்க்கை இனிமையானதாக இல்லை. இவருக்கு முதலில் ஒருவருடன் திருமணம் நடைபெற்று ஒரு மகனும் இருக்கிறார். முதல் கணவருடன் இருந்து பிரிந்துவிட்ட தாமரை, இரண்டாவதாக ஒருவருடன் திருமணம் நடைபெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவருடன் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடி கலக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று திருமணம் குறித்த ரவுண்ட் போன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பாவனி மற்றும் அமீருக்கு திருமணம் செய்வது போல் காட்டப்பட்டது. அடுத்த வெளியான ப்ரோமோவில், தாமரையின் கணவர் எங்களின் திருமணம் ஒரு அறையில் வைத்து தான் நடைபெற்றது, ஒரு புகைப்படம் கூட இல்லை என்று வருத்தமாக கூறினார். உடனே அவர்களுக்கு பட்டு புடவை, பட்டு வேஷ்டி அணிவித்து திருமணம் செய்து வைக்கின்றனர். இருவரும் ரம்யா கிருஷ்ணன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றனர். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்