அர்ஜுன் கெட்டவன்.! அவன் முகத்திரையை நான் கிழிக்கிறேன்.! சபதம் எடுத்த கோதை.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கோதை தற்போது நடேசனிடம் அர்ஜுன் கெட்டவன், அவன் தான் தமிழ் மீது ஏதோ திட்டம் தீட்டி பழி சுமத்தி இருக்கிறான், அவன் முகத்திரையை நானே கிழிக்கிறேன் என்று சொல்லி சபதம் எடுத்து இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையின் மகனாக இருக்கும் தமிழை கோதையின் மருமகன் அர்ஜுன் கொலைப்பழி சுமத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். ஆனால் அர்ஜூன் ஆள் வைத்து இது போன்ற சதி செயல்களில் ஈடுபட்டது தமிழுக்கு மட்டுமே தெரியும். இதை கோதை கோதையின் மகள் ராகினி உள்ளிட்டோர் இத்தனை நாட்களாக தமிழ் தான் செய்து இருப்பார் என்று சொல்லி நம்பிக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் கெட்டவன்.! அவன் முகத்திரையை நான் கிழிக்கிறேன்.! சபதம் எடுத்த கோதை.! 1

இந்த நிலையில் தற்போது தமிழ் மீது எந்த தவறும் இல்லை, அவர் நல்லவர், ஆனால் தன் மருமகன் அர்ஜுன் மீது தான் ஏதோ தவறு இருக்கிறது என்பதை தற்போது கோதை உணரத் தொடங்கி இருக்கிறார். அதன் முதல் கட்டமாக தற்போது கோதை நடேசனிடம் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ் மீது எந்த தவறும் இல்லை, அர்ஜுன்தான் கெட்டவன், அவன் முகத்திரையை நானே கிழிக்கிறேன். இத்தனை நாட்களாக நீங்கள் தனியாக போராடிக் கொண்டிருந்தீர்கள். இனிமேல் நானே களத்தில் நேரடியாக இறங்கப் போகிறேன், என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.


தமிழ் மீது எந்த தவறும் இல்லை, விரைவில் அவரை மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கோதைக்கு அறிவுரையும் வழங்கி வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்