விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழின் வீட்டிற்கு வரும் மேகனாவுக்கு கோதை தலையில் பூ வைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகிறார். இதனால் மேகனாவிற்கு தமிழ் மீது காதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த சமயம் பார்த்து தமிழின் வீட்டிற்கு வரும் சரஸ்வதி மீது மேகனா கோபம் கொள்கிறார். தமிழிடமிருந்து சரஸ்வதியை பிரிக்க வேண்டும் என்று அவர் மனதிற்குள் திட்டம் தீட்டுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றாக சென்று கொண்டிருந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் கதையை தற்போது இயக்குனர் வேறு விதமாக திருப்பி இருக்கிறார். தமிழுக்கு தொழிலதிபர் மேகனாவுடன் காதல் மலர்வது போன்று இயக்குனர் கதையை நகர்த்தி வருகிறார். பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் கதைக்களம் இன்னமும் மாறுவது போல தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மேகனா தமிழின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கோதை அவருக்கு தலையில் மல்லிகை பூ வைத்து விட, மேகனா கோதை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். அப்போது அந்த சமயம் பார்த்து சரஸ்வதியும் வீட்டிற்கு வருகிறார். சரஸ்வதியை பார்க்கும் மேகனாவிற்கு அவர் மீது கோபம் வருகிறது.
“இந்த சரஸ்வதி எதற்காக இன்னும் தமிழ் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்?” என்று சொல்லி சரஸ்வதி மீது கோபப்படுகிறார் மேகனா. இவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும் என்று சொல்லி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். விரைவில் மேகனாவிற்கு சரஸ்வதி தான் தமிழில் மனைவி என்கிற உண்மை தெரிய வந்து கதையை வேறு விதமாக நகர்த்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television