காவ்யாவுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கும் பிரச்சனையா? விலகலுக்கு இதான் காரணமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து முல்லையாக நடித்து வந்த காவியா தற்போது அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியே அந்த நாடகத்திலிருந்து விலகி விட்டதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பங்கான தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் தம்பிகளின் கதையை இது அழகாக எடுத்துரைக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், அதில் இருக்கும் சில கஷ்ட நஷ்டங்களையும் அழகாக எடுத்துக் கூறுவதால் இந்த நாடகத்தை பலரும் விரும்பி பார்க்கத் தொடங்கினர். இதில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் ஒரு நாள் தனது அறையில் தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

காவ்யாவுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கும் பிரச்சனையா? விலகலுக்கு இதான் காரணமா? 1

விளம்பரம்

இதனால் பாரதி கண்ணம்மாவில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியாவை முல்லையாக அறிமுகப்படுத்தினர். ஆரம்பத்தில் காவியாவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சித்ராவின் மறைவு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காவியா அறிமுகமான சில நாட்களிலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். இவரும் சித்ரா போல் முல்லையாக நடித்து குறுகிய காலத்திலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்து விட்டார். இதனிடையே தற்போது முல்லையும் நாடகத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் காவியாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நாடகத்திலிருந்து விலகி விட்டதாகவும், செப்டம்பர் 14 தான் தனக்கு கடைசி சூட்டிங் என்றும் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடையவை  போடு இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கவே இல்லையே.! மீண்டும் உயிருடன் வந்த அப்பத்தா.! ப்ரோமோ

காவ்யாவுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கும் பிரச்சனையா? விலகலுக்கு இதான் காரணமா? 3

விளம்பரம்

இந்த நிலையில் புதிய முல்லையாக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் வாணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாவண்யா முல்லையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையே தற்போது முல்லையாக நடித்து வந்த காவ்யா ஏன் விலகினார் என்ற காரணம் வெளியாகியிருக்கிறது. அவருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டீமுக்கும் ஏத, பிரச்சனை என்று பலரும் கிளப்பி விட்டிருந்தனர். ஆனால் அதெல்லாம் எதுவும் கிடையாது. காவியாவிற்கு அடுத்தடுத்து படங்களின் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதனால் அவருக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த முடியாது என்பதாலும், டைமிங் ஒத்து வராது என்பதாலும், அவர் சீரியலில் இருந்து விலகி முழு நேரமாக வெள்ளி திரையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் காவியாவை வெள்ளித்திரையில் பார்க்கலாம்.

விளம்பரம்

Leave a Comment