கன்னட மொழியில் வெளியாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள காந்தாரா படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை வைத்திருக்கிறார். கேஜிஎஃப் போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கன்னட மொழியில் கடந்த 30ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் உலக அளவில் சுமார் 100 கோடி வசூலை படைத்து சாதனை படைத்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் ஒரு அரசன், நிம்மதியை இழந்து காடுகளில் அலைகிறான். அப்போது அங்கு பழங்குடியின தெய்வத்தின் சிலையை காண்கிறான். அதன் பின்னர் அவனுக்கு நிம்மதி ஏற்படுகிறது.

அந்த சிலையை தன்னிடம் தருமாறு பழங்குடியின மக்களிடம் வேண்டுகிறான். அந்த சிலை வேண்டுமானால் நிலங்களை தங்களுக்கு தருமாறு பூசாரிக்கு அருள் வந்து அந்த மன்னனிடம் கூறுகின்றார். இதனால் அந்த மன்னன் அந்த நிலங்களை அந்த மக்களுக்கு தானமாக கொடுக்கிறார். பின்னர் அந்த மன்னனின் வம்சாவளியில் வரும் சிலர், மீண்டும் அந்த நிலங்களை அந்த மக்களிடமிருந்து பறிக்க நினைக்கின்றனர். ஆனால் மீண்டும் அருள் வந்து பூசாரி அவர் இறந்து விடுவார் என்று கூற, அதே போல் அந்த நிலங்களை திருப்பி கேட்டவரும் இறந்து விடுகிறார். பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நிலத்தை அபகரிக்க அரசு, வன அதிகாரிகளை வைத்து முயற்சிக்கிறது. அந்த அரசிடம் இருந்து அந்த நிலத்தை ஹீரோ காப்பாற்றுகிறாரா? அந்த மக்களை காப்பாற்றி இருக்கிறாரா? என்பது நான் படத்தின் மீதி கதை.

இந்தப் படம் குறித்த விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் வைத்திருக்கிறார். அவர் இது பலரும் எடுத்து புளித்துப் போன கதை தான் என்றாலும், இந்த படத்தை மிக நேர்த்தியாக எடுத்து இருக்கின்றனர். படத்தின் திரைக்கதை, வசனங்கள், பாடல்கள் என அனைத்தும் அருமையாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் கூட மிக அருமையாக எடுத்து இருக்கின்றனர். இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் சென்று ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று அவர் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். பல நாட்களுக்குப் பிறகு ப்ளூ சட்டை ஒரு படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை கூறியிருக்கிறார். நீங்களும் அவரது முழு வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Talkies