திருச்சிக்கு துணிக்கடை விளம்பரத்திற்கு வந்த கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியை பார்ப்பதற்காக திரண்ட கூட்டம் தற்போது வைரல் ஆகி வருகிறது. ரோடு ஸ்தம்பிக்கும் அளவிற்கு கூட்டம் கூடியதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஒரு சின்ன திரைக்கு நடிகைக்கு இவ்வளவு கூட்டமா என்று வியக்க வைத்திருக்கிறார் சைத்ரா ரெட்டி. பெங்களூருவை சேர்ந்தவர் சைத்ரா. ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்து வந்த இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அடி எடுத்து வைத்தார். இந்த நாடகத்தில் இவர் வில்லியாக நடித்திருந்த போதிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருந்தனர். திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளோடு சென்னைக்கு வந்த இவரின் கனவு ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கியது.

ஒரு வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆதரவு இருந்தது என்று சொன்னால் அதே நம் சைத்ரா ரெட்டிக்கு மட்டும்தான். பின்னர் சைத்ராவுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் வலிமை படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பையும் பெற்றிருந்தார் சைத்ரா. தற்போது அவர் முன்னணி நாயகியாக நடித்து வரும் ஒரு தொடர் தான் கயல். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இந்த சீரியலின் மூலமாக பல இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார். இந்த சீரியல் அவருக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. சைத்ராவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அப்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகருடன் இணைந்து நடனமாடி அதை வீடியோவாக பதிவேற்றி வருகிறார்.

அவரின் அந்த வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஒவ்வொரு வீடியோவும் தாண்டி இருக்கிறது. இந்த நிலையில் சைத்ரா திருச்சியில் உள்ள ஒரு துணி கடைக்கு திறப்பு விழாவிற்காக வந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஒரு ஊரே திரண்டு வந்தது போல் மிகப் பெரிய கூட்டம் திரண்டு வந்திருந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்தது. இந்த வீடியோவை சைத்ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து லவ் யூ சோ மச் டார்லிங்ஸ் என பதிவிட்டுள்ளார்.