அர்ஜுனுக்கு உதவியது கோதை தான் என்கிற உண்மையை தெரிந்து கொண்ட தமிழ்.! அதிரடியான ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்” சீரியலின இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அர்ஜூனை ஜெயிலிலிருந்து ஜாமினில் வெளிவர உதவியது கோதை தான் என்கிற உண்மை தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால் இந்த விஷயத்தை தமிழ் மிகச் சிறப்பாக கையாண்டு தனது தாய்க்கு பெருமை சேர்த்திருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கோதையின் இரு மகன்களாக இருக்கும் கார்த்திக் மற்றும் தமிழை ஒழித்துக் கட்ட கோதையின் மருமகன் அர்ஜூனே பல சதி திட்டங்களை தீட்டி வருகிறார். ஆனால் அந்தத் திட்டத்தில் அவர் தோற்று ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனுக்கு உதவியது கோதை தான் என்கிற உண்மையை தெரிந்து கொண்ட தமிழ்.! அதிரடியான ப்ரோமோ இதோ 1
பிரச்சனை முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் கோதை தனது மகள் ராகினிக்காக வக்கீலை சந்தித்து தனது மருமகன் அர்ஜூனுக்கு எதிராக வாதிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். அதேபோல வக்கீலும் வாதிடுவதை கைவிடுவதால் அர்ஜுனுக்கு எளிதாக ஜாமீன் கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ராகினியின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு கோதை, தமிழ், கார்த்திக், சரஸ்வதி, வசு என அனைவரும் வருகை தருகின்றனர். அப்போது அங்கு வைத்து அர்ஜுன் தமிழ் மற்றும் கார்த்திக் என்ன ஜெயிலுக்கு அனுப்ப நினைத்தார்கள். ஆனால் அத்தை கோதை எனக்கு உதவி செய்து மீட்டுக் கொண்டு வந்து விட்டார் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட கார்த்திக்கு கோதையின் மீது கோபத்தில் கொந்தளிக்கிறார். ஆனால் தமிழோ அவர் அர்ஜுனுக்காக இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார். நமது தங்கை ராகினிக்காகத்தான் இதை செய்திருப்பார் என்று கூறி கோதையை புரிந்து கொள்கிறார். இதனால் நெகிழ்ந்து போன கோதை கண்ணீர் விட்டு அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண…! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்