விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மேகனாவை கொலை செய்த வழக்கில் சரஸ்வதி சிறையில் தவித்து வரும் நிலையில், அவரை மீட்பதற்காக தமிழ் போராடிக் கொண்டிருக்கிறார். அதற்காக சரஸ்வதி சென்ற ஆட்டோ டிரைவரை அழைத்து சாட்சி கூற வைக்கிறார். ஆனால் கடைசி நிமிடத்தில் அர்ஜூன் ஆட்டோ டிரைவரிடம் பேசி சாட்சியை மாற்றி கூறுமாறு வைத்து விடுகிறார். இதனால் சரஸ்வதியின் சிறை தண்டனை நீட்டிக்கப்படுகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபராக இருக்கும் மேகனாவிற்கும் தமிழுக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. தமிழ் திருமணமாகாதவர் என்று நினைத்து மேகனா தமிழ் மீது காதலில் விழுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் மேகனாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. தன்னுடைய மாமா சொத்துக்காக உண்மைகளை தன்னிடமிருந்து மறைத்து விட்டதை மேகனா தெரிந்து கொள்கிறார். பின்னர் மாமா மேகனாவை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். வேகமாகவும் கொலை செய்யப்பட்டு நடுரோட்டில் கிடக்கிறார். அந்த நேரம் பார்த்து சரஸ்வதி அந்த இடத்திற்கு வர கொலைப் பழி சரஸ்வதி மீது விழுகிறது.
இந்த நிலையில் சிறையில் வாடும் சரஸ்வதியை காப்பாற்றுவதற்காக தமிழ் போராடிக் கொண்டிருக்கிறார். சரஸ்வதி சென்ற ஆட்டோ டிரைவரிடம் பேசி சாட்சி கூற அவரை அழைத்து வருகிறார். ஆனால் ஆட்டோ ட்ரைவர் நீதிமன்றத்தில் சரஸ்வதி தான் மேகனாவை கொலை செய்தார் என்று மாற்றி கூறுகிறார். அர்ஜுனனின் சதியால் ஆட்டோ டிரைவர் பிறழ் சாட்சியாக மாறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television