மேகனாவுக்கு தெரிய வந்த உண்மைகள்.! தமிழின் சட்டையை பிடித்து சண்டை போடும் மோகனா.! ப்ரோமோ உள்ளே

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரஸ்வதி தான் தமிழின் மனைவி என்கிற உண்மையை மேகனா தற்போது தெரிந்து கொள்கிறார். மேலும் தமிழின் சட்டையைப் பிடித்து அவர் கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார் இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் தமிழுக்கு மேகனாவுடன் நட்பு கிடைக்கிறது. தொழில் ரீதியாக இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், மேகனாவுக்கு தமிழ் மீது காதல் வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேகனாவுக்கு தெரிய வந்த உண்மைகள்.! தமிழின் சட்டையை பிடித்து சண்டை போடும் மோகனா.! ப்ரோமோ உள்ளே 1
தமிழுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் மேகனாவிற்கு தெரியாது. இதை தமிழின் நண்பராக இருக்கும் நமச்சியும் மேகனாவிடமிருந்து மறைக்கிறார். இதனால் மேகனாவிற்கு நாளுக்கு நாள் தமிழ் மீது காதல் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த விஷயத்தை தற்போது சரஸ்வதி தெரிந்து கொண்டு தமிழிடம் கூற முயற்சிக்கிறார். ஆனால் தமிழ் அவரை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிகழ்ச்சி ஒன்றிற்கு மேகனா வருகை தருகிறார். அங்கு தமிழும் சரஸ்வதியும் கணவன் மனைவி என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் உள்ளே வரும் அவர் தமிழும் சரஸ்வதியும் இணைந்து குத்து விளக்கு ஏற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.


இதனால் கோபத்தின் உச்சிக்கே செல்லும் மேகனா தற்போது தமிழின் சட்டையை பிடித்து அவரை திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்