மீண்டும் சண்டையை தொடங்கிய கோதை.! என்ன முடிவு எடுக்க போகிறார் தமிழ்.! இதோ ப்ரோமோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில் மீண்டும் கோதைக்கும் தமிழுக்கும் பிரச்சினை ஏற்படும் என்று தெரிகிறது. தமிழும் சரஸ்வதியும் தொடரின் கதை குறித்து பார்த்தோமானால், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் குடும்ப சூழ்நிலைகளால் படிப்பை தொடர முடியாமல் தனது தந்தை நடத்தி வரும் தொழிலை கவனித்துக் கொள்கிறார். இந்த சமூகம் அவரை படிக்காதவன் என ஏளனம் செய்கிறது. அவரது தம்பி கார்த்திக் நன்கு படித்து தந்தை நடத்திவரும் அதே நிறுவனத்தில் எம்டியாக பணிபுரிகிறார். அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஆரம்பத்தில் முட்டல் மோதல் இருந்து வரும் நிலையில், பின்னர் இருவரும் ஒன்று சேர்கின்றனர். அதன் பின்னர் குடும்ப எதிரியாக இருக்கும் அர்ஜுன் என்பவர் குடும்பத்திற்குள் நுழைந்து, இந்த குடும்பத்தை எப்படியாவது சிதைத்து விட வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சண்டையை தொடங்கிய கோதை.! என்ன முடிவு எடுக்க போகிறார் தமிழ்.! இதோ ப்ரோமோ.! 1

அந்தத் திட்டத்தில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இத்தனை நாள் தனது குடும்பத்திற்காக கஷ்டப்பட்ட தன்னுடைய மகனை தன் கையாலேயே கோதை அடித்து விரட்டும்படி அர்ஜுனன் செய்துவிட்டார். இதனால் இந்த நாடகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. பின்னர் தனியாக கம்பெனி தொடங்கி அதை நடத்தி வருகிறார் தமிழ். இந்த நிலையில் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களில் அசோசியேஷன் தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜெயித்து தற்போது தமிழ் அசோசியேஷன் டைரக்டராக பதவி ஏற்று இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்து வரும் உமாபதியிடம் நஷ்டம் கேட்டு கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழக்கு தொடுத்து இருக்கிறது. இந்த வழக்கு அசோசியேஷனின் சேர்மனாக இருக்கும் தமிழிடம் வருகிறது. அப்போது தமிழின் தந்தை இந்த வழக்கில் நீ கோதைக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தால் அவர் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்.

அப்போது தமிழ், உமாபதி மற்றும் கோதை இருவரையும் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது உமாபதி தேர்தலில் நான் உங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால், என் மீது இவ்வாறு நஷ்ட ஈடு வழக்கு போட்டு இருக்கிறீர்கள் என்று கோபமாக கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் கோதை நீங்கள் ஆர்டரை பாதியிலேயே கேன்சல் செய்ததால் தான் நஷ்ட ஈடு கேட்கிறோம் என்று கோபமாக பதிலளிக்கிறார். இதனால் தமிழ் யாருக்கு ஆதரவாக முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை. அந்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. தமிழை நம்பாமல் இருக்கும் கோதைக்கு சாதகமான முடிவை சொல்வதை விட, தமிழுக்கு முதலில் ஆர்டர் கொடுத்து, அவருக்கு தேர்தலில் துணையாக நின்று தமிழை தலைவர் ஆக்கிய உமாபதிக்கு சாதகமாக பதில் சொல்ல வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்