தமிழும் சரஸ்வதியும் தொடரின் இன்றைய எபிசோடு வேற லெவலில் அமைந்திருக்கிறது. தமிழ் தற்போது உமாபதிக்கு ஆதரவாகவும் தன்னுடைய தாய் கோதைக்கு எதிராகவும் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. அதில் உமாபதியிடம் நஷ்ட ஈடு கேட்டு கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் கோதை, கார்த்திக், நடேசன், அர்ஜுன் ஆகியோர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசனின் சேர்மனாக இருக்கும் தமிழை அணுகியிருக்கின்றனர். அப்போது ஆரம்பத்தில் தமிழ் கோதைக்கு ஆதரவாக பேசத் தொடங்குகிறார். கோதை செய்தது சட்டப்படி சரிதான் உமாபதி ஒரு மாதத்திற்கு முன்பே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தால் இந்த பிரச்சனை எழுந்து இருக்காது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மெட்டீரியலை விற்பனை செய்வதற்கு வேறு வழியை பார்த்திருப்பார்கள், அல்லது புது ஆர்டரை வாங்கி இருப்பார்கள். அதனால் சட்டப்படி கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நஷ்ட ஈடு கேட்பது சரிதான் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோதையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. உடனே கார்த்திக் எழுந்து அதான் அவரே சொல்லிவிட்டாரே எங்களுக்கு தேவையான நஷ்ட ஈடை கொடுங்கள் என்று சொல்லி உமாபதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நிமிஷம் உட்காரு என்று சொல்லிவிட்டு நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறது என்பதால் நீங்கள் செய்யும் அனைத்தும் சரி இல்லை, இந்த பிரச்சனையை கிளப்பியதே நீங்கள் தான், சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என்று உமாபதிக்கு சேர வேண்டிய மெட்டீரியலை திருடியது நீங்கள் தான், நீங்கள் திருடியது குறித்து வழக்கு தொடுத்தால் உள்ளே போக வேண்டி வரும்.
மெட்டீரியலை திருடியவரையும், திருடத் தூண்டியவரையும் குறித்து நான் வழக்கு தொடுக்கவா? என்று கேட்டு கோதை மற்றும் அர்ஜுனை ஆஃப் செய்கிறார். இதனால் என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television