வளைகாப்பில் குழந்தை இல்லாதவர் என்று சரஸ்வதியை அசிங்கப்படுத்திய பெண்.! வெளுத்து வாங்கிய கோதை.!

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோதை தற்போது தனது மருமகள் சரஸ்வதிக்காக ஒருவரிடம் சண்டைக்கு சென்று இருக்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகி தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. தற்போது பல விறுவிறுப்பான அதிரடி திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களின் பேராதரவை பெற்று விளங்கி வருகிறது. கோதை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கோதை, தற்போது தனது மருமகன் அர்ஜுனை நம்பி மூத்த மகன் தமிழ் மற்றும் மருமகள் சரஸ்வதியை மிகவும் அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வளைகாப்பில் குழந்தை இல்லாதவர் என்று சரஸ்வதியை அசிங்கப்படுத்திய பெண்.! வெளுத்து வாங்கிய கோதை.! 1

வீட்டை விட்டு வெளியேறிய தமிழ் சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்று தனது மனைவி பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி தற்போது அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டி வருகிறார். மேலும் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்களில் அசோசியேஷன் தேர்தலிலும் நின்று தலைவர் ஆகியிருக்கிறார் தமிழ். நிலைமை ஒரு பக்கம் இப்படி இருக்க தனது மருமகன் மீதுதான் ஏதோ தவறு என்று புரிந்து கொள்ளும் கோதை கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது சந்தேகப்பட ஆரம்பிக்கிறார். அவர் செய்யும் வேலைகள் அவரின் அறிவுரைகள் எதுவுமே சரி இல்லை என்று சந்தேகம் கொள்ளும் கோதை தற்போது அர்ஜுனை வெறுக்கவும் ஆரம்பித்து இருக்கிறார். மேலும் தனது மகன் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் கோதை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றே நடக்கிறது.


அந்த நிகழ்ச்சியில் கோதை, தமிழ், சரஸ்வதி என அனைவரும் கலந்து கொள்கின்றனர். இப்போது சரஸ்வதி அந்த பெண்ணிற்கு நலங்கு வைக்க வரும் பொழுது ஒருவர் வந்து குழந்தை இல்லாதவர் எப்படி நலங்கு வைக்க முடியும் என்று திட்டுகிறார். அப்போது கடுப்பான கோதை சரஸ்வதி நலங்கு வைக்கவில்லை என்றால் நானும் நலங்கு வைக்கப் போவதில்லை என்று கூறுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்