விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது பலரின் மனம் கவர்ந்த சீரியலாக மாறிப் போய் இருக்கிறது. இதில் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை. தற்போது அவர்கள் இருவரும் மருத்துவரை தேடி குழந்தையின்மை பரிசோதனை செய்ய சென்றிருக்கின்றனர். டெஸ்ட் ரிசல்ட் முடிவுகள் வந்துள்ள நிலையில் தற்போது மருத்துவர் இருவருக்கும் குட் நியூஸ் ஒன்றை கூறியிருக்கிறார். இதனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பல தடங்கல்களுக்குப் பிறகு தற்போது தமிழ் சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் நிறுவனங்களின் அசோசியேஷன் தலைவராகவும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆன பின்னரும் தனக்கும் தன் மனைவிக்கும் குழந்தை இல்லை என்கிற ஏக்கம் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இருவரும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு செல்கின்றனர். அங்கு குழந்தை இல்லாதவர் என்று சொல்லி சரஸ்வதியை அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் மணமுடைந்து போகும் சரஸ்வதி தன் கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு மருத்துவர்கள் சில பரிசோதனைகள் எடுத்து பார்த்த பின்பு உங்கள் உடல்நிலை பற்றி கூற முடியும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதனால் இத்தனை நாட்களாக பதட்டத்தில் இருந்த சரஸ்வதிக்கு தற்போது குட் நியூஸ் ஒன்று கிடைத்திருக்கிறது. இன்று மருத்துவரை சென்று இருவரும் பார்த்து கலந்தாலோசித்தப் போது மருத்துவர் டெஸ்ட் ரிசல்ட்களின் முடிவுகளை பார்த்துவிட்டு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.
அதில் உங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, உங்கள் இருவரின் உடல் நிலையும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. விரைவில் நீங்கள் இருவரும் பெற்றோர்களாக போகிறீர்கள் என்று மருத்துவர் கூறுகிறார். அப்போது உடல்நிலை நன்றாக இருந்தபோதிலும் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று சரஸ்வதி கேட்க, வீட்டில் எதுவும் பிரச்சனை இருந்தாலும் இதுபோல நடக்கும் நீங்கள் சைக்கலாஜிக்கல் பிரச்சனையில் இருந்தால் கூட இப்படி நடக்கும். முதலில் உங்கள் பிரச்சனையிலிருந்து வெளியே வாருங்கள், தியானம் செய்யுங்கள், ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், விரைவில் நீங்கள் இருவரும் குழந்தைகளை பெற்றெடுப்பீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television