வீடு மற்றும் கம்பெனியை பறித்துக்கொண்டு கோதையை வீட்டை விட்டு துரத்திய அர்ஜுன்.!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது அர்ஜுன் கோதையின் வீடு கம்பெனி என அனைத்தையும் ராகினி பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டு கோதை மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது் இந்த சீரியலில் தற்போது கோதையின் மருமகனான அர்ஜுன் சூழ்ச்சி செய்துதான் தமிழை வீட்டை விட்டு அனுப்பி விட்டார் என்கிற உண்மை வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடு மற்றும் கம்பெனியை பறித்துக்கொண்டு கோதையை வீட்டை விட்டு துரத்திய அர்ஜுன்.! 1
இதனால் அர்ஜுனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கோதை கூறுகிறார். ஆனால் அர்ஜுனோ வீடு கம்பெனி என அனைத்தையும் கோதை பெயரிலிருந்து ராகினி பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியிருக்கிறார். இந்த சூழ்ச்சி புரியாமல் இத்தனை நாள் கோதை கண்மூடித்தனமாக அர்ஜுனனை நம்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் வில் அர்ஜூன் கோதை மற்றும் அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார். ஆனால் தன்னால் வெளியேற முடியாது என்று சொல்லி வீட்டு பத்திரங்களை ராகினி பெயருக்கு மாற்றிய ஆதாரங்களை அர்ஜுன் காட்டுகிறார். அப்போது கடுப்பான நடேசன் அர்ஜுனனின் சட்டையை பிடித்து அடிக்கிறார். அப்போது ராகினி அவரை தடுத்து நீங்கள் எல்லாம் மனிதர்களா என்று திட்டுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தனது கணவருடன் இணைந்து புது தொழிலை தொடங்கிய 'கயல்' சீரியல் நடிகை அபி நவ்யா.! புகைப்படங்கள் இதோ

வீடு மற்றும் கம்பெனியை பறித்துக்கொண்டு கோதையை வீட்டை விட்டு துரத்திய அர்ஜுன்.! 3

இதனால் உடைந்து போன கோதை உங்களுக்கு சொத்து தானே முக்கியம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி வீட்டில் இருந்து வெளியேறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment