அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு சொன்ன தமிழ்.! எதிர்த்து கேள்வி கேட்கும் கோதை.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் வீட்டில் வசித்து வரும் கோதை காபி போடுவது, மாவு அரைப்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து வருகிறார். அப்போது வீட்டிற்கு வரும் தமிழ் உங்களுக்கு வசதியாக இருக்க புது வீடு பார்த்து விட்டேன் நீங்கள் புது வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூற அங்கு செல்ல மறுத்து தமிழிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் கோதை. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு சொன்ன தமிழ்.! எதிர்த்து கேள்வி கேட்கும் கோதை.! ப்ரோமோ இதோ 1
அர்ஜீன் செய்த சதியால் வீடு, கம்பெனி என அனைத்தையும் இழந்து தெருவில் நின்ற கோதை குடும்பத்திற்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் தமிழும் சரஸ்வதியும். இந்த நிலையில் தமிழுக்கும் சரஸ்வதிக்கும் உறுதுணையாக இருக்கும் பொருட்டு வீட்டு வேலைகளை செய்து வருகிறார் கோதை. அதிகாலையிலேயே எழுந்து அனைவருக்கும் காபி போடுவது, வீடு கூட்டுவது, மாவு அரைப்பது என்று பல வேலைகளில் ஈடுபடுகிறார். அதை பார்க்கும் சரஸ்வதி நீங்கள் எதற்கு அத்தை இந்த வேலைகள் எல்லாம் செய்கிறீர்கள்? என்று கேட்க, நான் இந்த வேலைகளை எல்லாம் செய்யக்கூடாதா? என்று கேட்டுவிட்டு தொடர்ந்து வேலைகள் செய்கிறார் கோதை.

அப்போது அங்கு வரும் தமிழ் உங்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும் பொருட்டு பெரிய வீடாக பார்த்து இருக்கிறேன் என்று கூறுகிறார். அப்போது கோதை தமிழைப் பார்த்து, “வசதி என்பது வாழும் வீட்டில் இல்லை, யாருடன் வசிக்கிறோம் என்பதில் தான். எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று சொல்லி தானே இங்கு அழைத்து வந்தீர்கள்? இப்பொழுது எங்களை தனியாக போகச் சொன்னால் என்னை நியாயம்? என்று தமிழிடம் கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்