தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் சரஸ்வதி கர்ப்பமானதிலிருந்து அவர் சின்ன சின்ன வேலையை செய்தால் போல அவரை செய்ய விடாமல் தடுத்து எல்லா வேலையும் தானே இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோதை குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் அர்ஜூன். அவரது எண்ணத்தில் நிறைவேறியும் இருக்கிறார். தனது மனைவி ராகினியின் பெயருக்கு அனைத்து சொத்துக்களையும் மாற்றிய அர்ஜுன் கோதை மற்றும் அனைவரையும் வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். வெளியேறிய அனைவரும் தற்போது தமிழ் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இந்த நிலையில் ராகினியின் வளைகாப்புக்குச் சென்ற சரஸ்வதி கர்ப்பமாக இருக்கும் செய்தி கிடைக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமே மனமகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் சரஸ்வதியை சின்ன சின்ன வேலை செய்யாமல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் தானே சமைத்துக் கொடுக்கிறார். இதை பார்த்த அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television