எதிர்நீச்சல் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விசாலாட்சியை ஈஸ்வரி எதிர்த்து பேசிவிட்டு கோபத்துடன் வெளியேறுகிறார். இதனால் விசாலாட்சி அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆதி குணசேகரனை கண்டுபிடிக்க முடியாமல் ஒரு புறம் கதிரும் ஞானமும் அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஜோசியர் சொன்னதை கேட்டுக்கொண்டு 100 கிலோ மீட்டர் கிழக்கே சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் சாமியார் ஒருவர் கதிரையும் ஞானத்தையும் பெயர் சொல்லி அழைக்கிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் இருவரையும் ஒரு இடத்தில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு செல்கிறார். அப்போது கதிர் ஞானத்திடம் நமது தங்கை நம் மானத்தை வாங்கினாள், அதனால் நம்மை ஊர் முழுவதும் அறிந்து கொண்டு இவ்வாறு கண்டவன் எல்லாம் அசிங்கப்படுத்துகிறான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விசாலாட்சி ஈஸ்வரியிடம் வெண்பாவின் தாயாருக்கு போன் செய்து கொடுக்குமாறு கூறிக் கொண்டிருக்கிறார். ஆதி குணசேகரன் காணாமல் போனதிலிருந்து விசாலாட்சி தன்னுடைய குணத்தை மாற்றிக்கொண்டார். மருமகள்களை பழைய மாதிரி கொடுமைப்படுத்த ஆரம்பித்து விட்டார்.

வெண்பாவின் தாயாருக்கு இப்பொழுதே போன் செய்யுமாறு விசாலாட்சி கூற நான் எதுவும் தவறாக செய்யவில்லை இனிமேல் இது பற்றி ஏதாவது பேசுனீர்கள் என்றால் நன்றாக இருக்காது என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்புகிறார். இதனால் விசாலாட்சி அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV